நீண்ட நாட்களுக்குப்பிறகு அற்புதமான கிராமத்து மண்வாசனை கொண்ட படத்தை கொடுத்திருக்கிறார் தனா. கார்த்திக்ராஜாவின் பின்னனி இசை கதையோடு பார்வையாளர்களை ஒன்றச்செய்துவிடுகிறது. பிரியனின் பாடல் வரிகள் அழகாக வந்துள்ளது, சில இடங்களில் வரிகள் சொனங்கும்போது இசை சரிசெய்துவிடுகிறது. சாதிகளை வைத்து நடக்கும் பிரச்சனையை இயக்குனர் நாசூக்காக கையாண்டிருக்கிறார்.  கிராமத்து ஹேரக்டருக்கு ஏற்றவாறு மாறியிருக்கிறார் விஜய் யேசுதாஸ்.

download
மனிதர்கள் அனைவைரும் சமம்தானே… இன்னும் சாதிகளின் வழியாய் கருணை கொலைகளும், கௌரவ கொலைகளும் நடந்து கொண்டுதானே உள்ளது. அத்தகைய எண்ணங்கள் கொண்ட மனிதர்களுக்கு இப்படம் சாட்டையடி. இடைவேளைக்கு பின்தான் திரைப்படம் சூடுபிடிக்கிறது. அம்ரிதாவின் நடிப்பு ஹேரக்டரோடு ஒன்றுகிறது. தன் அண்ணனை அடித்த முனீஸை வீடு தேடி வந்து ரகளை செய்யும் காட்சி ஓஹோ போட வைக்கிறது. எல்லா வெரைட்டியிலும் பாடல்கள் தர முயற்சித்திருக்கிறார்கள். இன்னும் சிறப்பான முறையில் வட்டார மொழியை பேசியிருக்கலாம்.

17

பாரதிராஜா நடிப்பில் அசத்தியிருக்கிறார். முனீஸின் அக்காவாக நடித்திருக்கும் ஹேரெக்டர் மிக இயல்பாக நடித்திருக்கிறார். அவர் அம்ரிதாவிற்கு புத்திசொல்லும் இடம் அருமை. தன்னை நேசிப்பவன் கொல்லப்பட்ட செய்தி கேட்டு அந்த பெண் கதறும்போது பெரும் வலி மனதை சூழ்ந்து கொள்கிறது. பேரிழப்பின் வழியாய் அந்த குரலை எடுத்துக்கொள்ளாமல், சாதி குறியீடோடு ஊர்மக்கள் பார்த்து அந்த பெண்ணை மூச்சுபிடித்து கொலைசெய்யும் காட்சி கசப்பான உண்மைதான்.

1517530042-5505

ஊருக்காக தன் உயிரை நீத்த அல்லது தொண்டாட்றி உயிர் நீத்த மனிதர்களை அவர்களின் நினைவுகளை போற்றும் விதமாகவும், அவர்கள் இறந்த பின்னும் அடுத்தவர்களுக்கு தொண்டாட்றிக்கொண்டிருக்கவும்தான் மக்கள் சுமைதாங்கி கற்களை நட்டு வைத்தார்கள். வழிப்போக்கன் பயணத்தில் களைத்திருக்கும் போது தனது சுமையை சாலையோறத்தில் இறக்கிவைத்து இளைப்பாறிக்கொள்ளத்தான் சுமைதாங்கி கற்கள் முன்னோர்கள் நட்டுவைத்தார்கள்.

 

திரைப்படத்தின் இறுதியில் சுமைதாங்கி கல்லை தெய்வமாக வழிப்படும் காட்சி காண்பிக்கப்பட்டிருப்பது நமது தொன்மத்தை நினைவு படுத்துகிறது.

 

எத்தகைய நட்புகளும் சாதி கட்டமைப்பில் கசந்துவிடுகிறது என்பதை அழகாக காட்சிப்படுத்தியிருப்பார்கள். திரைப்படத்தில் ஆதிக்க சாதியை குறிப்பிடும்போது மேலோட்டமான வசனங்களால் சொல்லிச்செல்வது சிறப்பு. வெளிப்படையாய் சாதியை சொல்லி பெருமை பட்டுக்கொள்ளும் காட்சிகள் இல்லாதது வரவேற்கதக்கது.

மொத்தத்தில் சாதி மனப்பான்மையோடு வாழும் மனிதர்களுக்கு சுலோ பாய்சன் தருகிறான் இந்த படைவீரன்.

சுமைதாங்கி கற்களின் வழியாய் இன்னும் உயிர்ப்போடு கம்பீரமாய் நிற்கிறான் இந்த படைவீரன்.

 

வாழ்த்துக்கள் தனா…

One Response so far.

  1. Krish says:

    உங்களது கருத்துக்கள் மிகவும் அருமை ……..


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube