பூட்டானிற்கு பணி நிமித்தமாக பயணிக்கும்பொழுது எழுத்தாளர் ஜே. ஷாஜஹான் சார் அந்தோன் சேகவின் புத்தகத்தை கொடுத்தார். இரயில் பயணம், அந்தோன் சேகவின் புத்தகம் எவ்வளவு சந்தோசமான தருணங்கள். ஜன்னலோர இருக்கையில் அமர்ந்துகொண்டு, தேநீர் பருகிக்கொண்டே அந்தோன் சேகவின் கதாபாத்திரங்களோடு பயணித்தேன். 6521

பச்சோந்தி என்ற முதல் கதையில் போலிஸ்காரர் அச்சுமலோவின் கதாபாத்திரத்தை மிக அழகாக செதுக்கியிருப்பார் சேகவ். ஒரு நாயினால் கடிபட்ட “ஹீரியக்” சந்தையில் நாயின் காலை பிடித்துக்கொண்டு சப்தமிட்டு கூட்டம் சேர்க்கிறான். இதனைக்கண்ட அச்சுமலோவ் முதலில் “ஹீரியக்” கிற்கு பரிந்து பேசுகிறார், பின் நாய் ஜெனரலோட நாய் என கூட்டத்தில் இருப்பவர்  கூறவும் உடனே தனது எண்ணத்தை மாற்றி “ஹீரியக்”மீது குற்றம் சாடுகிறார். பின் இன்னொருவர் இது ஜெனரலின் நாய் இல்லை எனக்கூறவும் மீண்டும் “ஹீரியக்”கிற்கு பரிந்துபேசுகிறார். மீண்டும் மற்றொருவர் இது ஜெனரலின்  நாய் எனக்கூறுகிறார். ,மீண்டும் “ஹீரியக்” மேல் குற்றம் சாடுகிறார். பின் ஜெனரலின் வீட்டில் வேலைசெய்பவர்  இது “ஜெனரலின் நாய் இல்லவே இல்லை , இந்த நாய் ஒரு தெருநாய்தான் எனக் உறுதிசெய்கிறார். பின் இன்னொருவர் இது ஜெனரலின் சகோதரரோட நாய் எனக்கூறவும் . நாயை வார்த்தைகளால் புகழ்கிறார் போலிஸ்காரர் அச்சுமலோவ். பின் ஹீரியக் கை மிரட்டி அனுப்புகிறார். மக்கள் அனைவரும் ஹீரியக்கைப் பார்த்து சிரிக்கின்றனர்.

பணம் புகழ் உள்ள மனிதர்களுக்கு பரிந்து ஒத்து ஊதும் மனிதர்களை இக்கதையில் ”அச்சுமலோவின் ”கதாபாத்திரத்தில் அடையாளம் காட்டுகிறார். பச்சோந்தி உருமாறுவதை போன்றே அச்சுமலோவ்வும் மாறி மாறி பேசுகிறான்.

வான்கா சிறுகதையை படித்து கண்கள் குளமாகிவிட்டன. பிரிவின் வலியை வான்கா கதையை படிக்கும்போது உணர முடியும். வான்கா ழூக்கவ் தனது தாத்தாவிற்கு பணி செய்யும் இடத்தில் இருக்கிற கொடுமையை கடிதத்தில் எழுதுகிறான்.  மிக முக்கியமான சிறுகதை வான்கா. இந்தக்கதையை சேகவ் எழுதும்போது தானும் ஒரு குழந்தையாய் மாறி எழுதியுள்ளார்.

தத்துக்கிளி என்ற குறுநாவலில் ஓல்கா இவானாவ்னாவின் கதாபாத்திரத்தில் மனம் அலைபாயும் பெண்ணின் அக உளைச்சல்களை அழகாக படம்பிடித்துக்காட்டியுள்ளார்.

நாய்க்கார சீமாட்டி கதையில் நாற்பது வயதுமிக்க தீமித்ரி தீமித்ரிச் கூரோவ் -விற்கும் இருபது வயதுமிக்க பெண்னிற்கும் உண்டாகிய காதலையும், இருவரும் திருமணமானவர்கள். அவர்களுக்குள் மலர்ந்த இந்த முறையில்லா காதலுடன் மன உளைச்சலில் அவதியுருகிறார்கள் என்பதை அற்புதமாக கூறியிருப்பார் சேகவ்.

ஆறாவது வார்டு என்ற குறுநாவல் மிக அற்புதமான படைப்பு. டாக்டராக வரும் ஆந்திரேய் வேறுயாருமில்லை சேகவ்தான். மருத்துவமனையில் டாக்டராக இருக்கும் ஆந்திரேய். இறுதியில் அதே மருத்துவமனையில் இறந்துவிடுகிறார். இடையில் கதையில் எழுப்பும் தத்துவ விசாரனைகள் மிக அற்புதமானவை.

அந்தோன் சேகவ் ரஷ்ய எழுத்தாளர். ஆனால் அவரை ரஷ்ய எழுத்தாளர் என்ற சிறிய வட்டத்தில்மட்டும் அடைக்க முடியாது. எளிய மக்களின் அக உணர்வுகளையும், காதலையும் கொண்டாடியவர் சேகவ். தனது கதாபாத்திரங்களின் வழியாய் அவர் உண்டாக்கியிருக்கும் காட்சிகள் அற்புதமானவை.

அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.

அந்தோன் சேகவ் டாக்குமெண்ட்ரி

 

 

 

2 Responses so far.

  1. AK says:

    //சந்தோசமான தறுணங்கள்//

    பானகத்துரும்பு என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா..? இனிப்பான பானகத்தில் நெருடும் துரும்பு வாயின் சுவையைக் கெடுத்து விடுவதுபோலச் சிற்சில எழுத்துப்பிழைகளும்…

    கவனிப்பீர்கள் என நம்புகிறேன்…

    நன்றி.

  2. kj.ashokkumar says:

    நல்ல புத்தகம் இது. ரஷ்ய எழுத்த்தாளர்களில் குறிப்பாக தல்ஸ்தாய், தாஸ்தெயேவிஸ்கி, செக்காவ் மூவ‌ரும் படித்து முடித்தபின்னும் நம் மனதில் இருந்து கொண்டேயிருப்பார்கள். இன்னும் விரிவாக எழுதியிருக்கலாம். அந்த டாக்குமெண்ரி சூப்பர். வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube