இன்று மிகவும் உற்சாகமாக பயணம் தொடங்கியது; அலுவலகப்பயணம்தான் எனினும் உற்சாகம்தான், அந்த ஊரின் பெயரைக் கேட்டாலே உங்களுக்கும் உற்சாக டானிக் குடித்ததுபோன்ற உணர்வு வந்துவிடும், அந்த ஊரின் பெயர் திம்பு. Jigme Khesar Namgyel Wangchuck ராஜாவாகவும், Jetsun Pema ராணியாகவும், ஆட்சி செய்யும் பூட்டான் நாட்டில் உள்ள ஊர்தான் திம்பு.
என் நண்பனின் அறையில் ஜெட்சன் பெமாவின் அழகிய புகைப்படம் இருக்கும். அவன் விழித்ததும் ஜெட்சன் பெமாவின் புகைப்படத்தை பார்ப்பான். அவ்வளவு பிடிக்குமா என்றேன்.
ஆம் ஜெட்சன் பெமாவின் முகத்துல ஒரு அமைதி தெரியிறத நீ கவனிச்சயா….
இல்லை
அந்த புகைப்படத்தை பாக்குறப்ப மேனேஜர் திட்டுற டென்சன்லாம் காணாமப்போயிடுது?
சரி
பேசாம நீ பூட்டான் பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணிக்க..
பூட்டான் பொண்ணுங்க மத்த பொண்ணுங்கள மாதிரி இல்ல
இவங்கள லவ் பண்றது சாதாராண விசயமில்ல
அவ்வளவு நேரமும் நமக்கு கிடைப்பதில்லையே என்றான்.
அப்ப ஜெட்சன் பெமாவோட போட்டோவே பாரு.. என்றேன்
ஜிக்மே கேசர் நக்மியால் வாங்சுக்தான் கோவிக்காமல் இருக்க வேண்டும்.
பூட்டான் மக்கள் அமைதியானவர்கள்; புத்த மதத்தின் சாரத்தை நேசித்து அதன் படி வாழ்வதால் அவர்கள் எதற்கும் அவசரப்படுவதில்லை; எதிலும் நிதானம்தான். திம்பு நகரில் ஹாரன் சப்தமே கேட்பதில்லை. யாரும் யாரையும் முந்துவதில்லை; போட்டியில்லை; நிதானம்தான். சாலையை கடக்க விரும்புபவர்கள் இந்தியாவைப்போல் கையை நீட்டிக்கொண்டு ஓடத் தேவையில்லை. மிக நிதானமாக நடந்து கடக்கலாம். வாகன ஓட்டிகள் நின்றுவிடுவார்கள்.
இந்தியாவில் இப்படி நிதானமாக கடக்க முடியுமா?
நிதானமாக கடக்க நினைத்தால் வாகனம் நம்மீதேறி கடந்து சென்றுவிடும்.
தென்னிந்தியாவில் வெய்யில்தாக்கம் வெளுத்து வாங்கிகொண்டிருக்கும் இவ்வேளையில். இங்கே எப்போதும் இளம்தென்றல் வீசிக்கொண்டுள்ளது. பூட்டான் வேறு நாடாக இருந்தாலும் ; பூட்டான் வாசிகள் இந்தியர்களை அதிகம் நேசிக்கின்றனர். இந்திய இராணுவத்தினரின் ஊர்திகள் செல்லும்போது, சாலையில் பிஞ்சுக் குழந்தைகள் கரங்களை ஆட்டி வணக்கம் தெரிவிக்கின்றனர்.
மடிப்பு மடிப்பான பசுமை நிறைந்த மலைகளுக்கு மத்தியில், சிறிய சிறிய நீரூற்றுகள் நீரோடைகளாக ஓடி ஆற்றில் கலக்கின்றன. ஊற்று நீரைப்பருகும் போது அலாதியான சுவை உண்டாகின்றது.
எங்கள் அலுவலக லைப்ரேரியில் பூட்டான் கதைகள் புத்தகங்கள் கிடைக்கவில்லை; டூரீஸ்ட் கெயிட் க்கு தேவையான புத்தகங்களே உள்ளன. திம்புவில் புத்தக கடைக்கு சென்று பூட்டான் சிறுகதைகளை வாங்க வேண்டும். இன்னும் இரண்டொரு நாளில் புத்த பூர்ணிமா வருகிறது. புத்தனின் தேசமான பூட்டான் உற்சாகத்தில் மேலும் அழகாகும்..
நேற்று உதிரிப்பூக்கள் திரைப்படம் பார்த்தேன் “ இந்த பூங்காற்று தாலாட்ட.. சின்ன பூவோடு நீராட்ட என்னும் பாடல் மனதை மிகவும் உருக்கியது. கங்கையமரன் அவர்களின் வரிகளிள், இளையராஜாவின் குரலோடு கூடிய இசையில் மனம் லயித்துவிட்டது, திரைப்படம் பற்றி விமர்சிக்கவில்லை. எல்லோராலும் ரசித்து கொண்டாடிய படம். ஒவ்வொரு காட்சிகளும் அற்புதம்தான். விஜயனின் கதாபாத்திரம் மிகவும் கேவலமானது என்றாலும்; கேவலமான மனிதனாகவே வாழ்ந்திருப்பார். அஸ்வினி போன்ற மனைவிகளை என் பால்யத்தில் பார்த்துள்ளேன். அற்புதமான திரைப்படம் ; கண்ணீர் வராமல் யாரும் இந்த திரைப்படத்தை பார்க்கமுடியாது என்பது எனது எண்ணம்.
சில தினங்களாக அ.முத்துலிங்கம் அவர்களின் கட்டுரைகளை படித்துவருகிறேன். அற்புதமான எழுத்து நடை. நடப்பில் தொடங்கி, சங்ககால பாடல்கள் வரை அனைத்திலும் தேர்ந்த பரிச்சியம் கொண்டவர். ஒவ்வொரு கட்டுரையும் கிளாசிக்தான். எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர். விடுமுறைக்குக்கு சென்றபோது ஜே ஷாஜஹான் அவர்கள் நாடற்றவன் என்ற அ. முத்துலிங்கம் அவர்களின் கட்டுரை தொகுப்பை கொடுத்தார்.
அந்த புத்தகத்தில் எல்லா கட்டுரைகளும் எனக்கு பிடித்தமானவைதான். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் கொக்குவில் என்ற அவரது பிறந்த ஊர்பற்றிய நினைவுப்பகிர்வு, மற்றும் நாடற்றவன் என்ற ஒலிம்பிக்கில் எந்த நாடையும் சார்ந்தில்லாத ஒருவனைப் பற்றிய கட்டுரை. அனைவரும் வாசிக்கவேண்டிய எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்கள்.
வணக்கம்,
http://www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US
உங்களது பதிவு பகிரப்பட்டுள்ள அதேவேளை உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.
நன்றி..
தமிழ்US
அருமை.. அருமை… நானும் பூட்டன் மக்களால் கவரப்பட்டேன்.. நன்றி உங்கள் பதிவிற்கு.
காயத்ரி…
அருமை. பூடான் மற்றும் திம்பு பற்றி அருமையாக எழுதி இருக்கீங்க. இன்னும் விளக்கமாக நீங்க பார்த்த இடங்கள் பற்றி எழுதுங்க
வணக்கம் அருமையான வார்த்தைகள் ஆயிரம் அர்த்தங்கள் பூட்டான் புகழ் ஓங்குக
பூட்டான் பற்றிய அழகான,ரசனையான தகவல்கள்..புன்முறுவலை தந்த முதல் பத்தி..
அ.மு வரை ..பூங்காற்று தாலாட்டிப் போனது..நன்றி..
தங்கள் அருமையான பதிவுகளை இங்கும் இணைக்கலாமே http://tamilblogs.in