பூட்டானுக்கு பணி நிமித்தமாக வந்த நாள் முதல் பூட்டான் நாட்டின் இயற்கை அழகையும், அமைதியான மக்களையும் கண்டு பழகியபின் அவர்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள இணையத்தில் பூட்டான் பற்றிய தகவல்களை தேடினேன். எனது அலுவலக நூலகத்திலிருந்து Journey Across Singye Dzong : A True Life Story… என்னும் Tandin wangchukஎழுதிய புத்தகத்தை படித்தேன்.  Singye Dzong என்ற கிழக்கு பூட்டானில் இருக்கும் மடாலயத்திற்கு நண்பர்களுடன் சேர்ந்து பயணித்த அனுபவங்களை அழகாக விவரித்திருப்பார். புத்தகத்தைப்படிக்கும் பொழுது நாமும்அவரோடு பயணிப்பதைப்போன்ற உணர்வுகள் மனதில் உண்டாகிறது.

dzong

சமீபத்தில் Hidden Bhutan: Entering the Kingdom of the Thunder Dragon என்றபுத்தகத்தைப்படித்தேன். Martin Uitz என்பவர்எழுதியிருக்கிறார். பூட்டான் நாட்டின் கலாச்சாரத்தைப் பற்றி அறிந்து கொள்ள இந்த புத்தகம் உதவுகிறது.

புத்தககடைக்கு சென்று பூட்டான் சிறுகதை புத்தகங்களை வாங்கலாம் என்ற சிந்தனையோடு திம்பு நகரத்திற்குள் நடந்தேன். மழைத்தூரிக்கொண்டேயிருந்தது;  கூகுள் மேப்பிள் புத்தககடையின் முகவரியை தெரிந்துகொண்டு பயணித்தேன். சாலை தூய்மையாக இருந்தது. மக்கள் எந்தவித பரபரப்புமின்றி இயல்பாய் நடந்துகொண்டிருந்தனர். பூட்டான் முகங்களும், அதற்கு ஈடாக வங்காளிகளின் முகங்களும் மார்க்கெட்களில் தெரிந்துகொண்டிருந்தன.

புத்தககடைக்கு சென்று எனது விருப்பத்தைக் கூறினேன். அழகான பூட்டான் பெண் பில்லிங் செக்ஸனில் இருந்தாள். அவள் கண்கள் சிறியதாகவும், முகம் புன்னகையை ஏந்திக்கொண்டும் இருந்தது.

நான் பூட்டான் எழுத்தாளர்கள் எழுதிய பூட்டான் பற்றிய சிறுகதைகளை தேடினேன். ஆனால் அப்படியான புத்தகங்கள் கிடைக்கவில்லை . பின் Buttertea at Sunrise – Britta Das என்ற கனடா நாட்டைச்சேர்ந்த எழுத்தாளர் எழுதிய புத்தகம் கண்ணில்பட்டது புத்தகத்தை எடுத்து சில பக்கங்கள் புரட்டினேன். எளிமையான ஆங்கிலத்தில் நடை இருந்தது. வாங்கிவிட்டேன். பில்லிங் செக்ஸன் பெண் அழகாக புன்னகைத்துக்கொண்டு பேப்பர் கவரில் போட்டுக்கொடுத்தாள்.

Buttertea_At_Sunrise_785631

அலுவலக அறைக்கு வந்து உடனே படிக்க ஆரம்பித்தேன் . கனடா நாட்டைச்சேர்ந்த பிசியோதெரபி படித்த மருத்துவரான பிரிட்டாதாஸ் தானாக பூட்டான் நாட்டில் பணியாற்ற விரும்பி 1997 ஆம் ஆண்டு வந்துள்ளார். அப்போது கிடைத்த அனுபவங்களை புத்தகமாக எழுதியுள்ளார்.

புத்தகத்தில் முதன்முதலில் பூட்டான் நாட்டில் வந்திறங்கியவுடன் கிடைத்த அனுபவங்கள். பின் கிழக்கு பூட்டானில் உள்ள மோங்கர் என்ற ஊரில் பணியாற்றிய அனுபவங்கள். அங்குள்ள மக்கள் அவரிடம் காட்டும் அன்பு என அனைவரையும் நேசித்த கள்ளம் கபடமற்ற அவர்களின் அன்பையும்; மோங்கர் மார்கெட்டில் கடைக்காரருடன் நடக்கும் உரையாடலையும் அழகாக பதிவு செய்துள்ளார்.

பூட்டான் பற்றி அறிந்துகொள்ள இந்த புத்தகம் மிக முக்கியமான புத்தகமாகும்.

IMG_20180507_163048

பூட்டான் சாலைகள்

திம்பு நகரம் மலைகளுக்கு இடையே இருக்கும் பள்ளத்தாக்குகளில் விரிந்து கிடக்கின்றது. ஒரே மாதிரியான கட்டிடங்கள் ; உயர்வு தாழ்வு எண்ணாமல் வேறுபாடின்றி பழகும் மக்கள் என இயற்கையையும், இயற்கையோடு இணைந்து வாழும் மனிதர்களையும் காணும்பொழுது மனதில் மகிழ்ச்சி தவழ்கிறது.

 

மாலை நேரத்தில் திம்பு நகரத்தை சுற்றி நடந்தேன். வாகன இறைச்சலற்ற சாலையில் நிம்மதியாக நடக்க முடிந்தது. சாலையோரத்தில் சிறியதும், பெரியதுமாக பூங்காக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ராணியின் 26 வயதின் நினைவாக புத்தர் சிலையொன்று பூங்காவில் அமைக்கப்பட்டிருக்கின்றது. அருகிலேயே திம்ப்சூ நதி அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது. திம்பு நகரத்தில் நுழையும்போது மலை உச்சியிலிருக்கும் பெரிய புத்தர் சிலை நம்மை வரவேற்கிறது. திம்புவின் அடையாளமாக புத்தர் சிலை உள்ளது.

DSC_0742

திம்புவின் அடையாளமாக விளங்கும் புத்தர் சிலை

நதியின் மேல் இருக்கும் மரத்தாலான பாலத்தை கடந்தால் சீனா மார்க்கெட் என்ற மார்க்கெட் உள்ளது. அன்று மார்க்கெட் விடுமுறை என்பதால் கடையில் என்னவகையான பொருட்கள் விற்பனைக்கு வைத்துள்ளார்கள் என பார்க்க இயலவில்லை. பின் காய்கறி மார்க்கெட்டிற்கு சென்று பார்த்தேன். மிகவும் சுத்தமான மார்க்கெட். பூட்டானில் அதிகாரியாக பணிபுரியும் டிம்சுக்கை சந்தித்தேன். எந்த ஒரு அதிகாரி என்ற மனப்பான்மையின்றி மிக எளிமையாக பழகினார்.

DSC_0756

பூட்டான் நண்பருடன்

IMG_20180507_163749

பூங்காவில்

DSC_0754

மேகங்கள் தொட்டுச்செல்லும் மலைகள்

பூட்டான் மக்கள் வீடுகளின் மனித உறுப்பு படத்தை (ஆணின்) சித்திரமாக வரைந்துள்ளனர். ஆண்மையின் அடையாளமாகவும், தீய சக்திகள் அண்டாது எனவும் நம்புகின்றனர்.

SONY DSC

பூட்டான் வீடுகள்

IMG_20180507_164420

திம்ப்சூ நதி

DSC_0753

மலை உச்சியிலிருந்து திம்பு நகரம்

இயற்கையையும், அமைதியையும் , சுத்தமான காற்றையும் சுவாசிக்க எண்ணுபவர்கள் கண்டிப்பாய் பார்க்க வேண்டிய இடம் பூட்டான்.

 

 

 

 

 

One Response so far.

  1. Rakkappan says:

    Very nice and keep it up..


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube