உலக மக்கள் அனைவரும் அமைதியைத்தான் நேசிக்கின்றனர். போரை யாரும் விரும்புவதில்லை. சமீபத்தில் தோசி மாருகி எழுதிய மாயி-சான் ஹிரோசிமாவின் வானம்பாடி என்ற புத்தகத்தை படித்தேன். FIRE OF HEROSHIMA என்ற புத்தகத்தின் தமிழ்வடிவம். தமிழில் கொ. மா. கோ. இளங்கோ சிறப்பாக மொழியாக்கம் செய்துள்ளார். fire of herosima

தமிழகத்தில் நடைபெற்றுவரும் ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் பெரும் போராட்டத்தினாலும், உயிரிழப்பினாலும் வெற்றியடைந்திருப்பது மனதிற்கு மகிழ்சியை அளித்தாலும். உயிரிழந்தவர்களையும், அவர்களை பிரிந்துவாழும் உறவினர்களை நினைக்கும்பொழுதும் மனது பெரும்வலியை சுமந்துகொள்கிறது.

தோசி மாருகி ஒரு ஓவியர். வடக்கு ஜப்பான் தீவு நகரமொன்றில் தோசி மாருகியும், அவரது கணவரும் அணுகுண்டு வீச்சு நிகழ்வையும், அதன் பாதிப்பையும் உணர்த்தும் ஓவியங்களை ஒவியக்கண்காட்சியில் வைத்திருந்தபோது. அங்குவந்த ஒரு பெண்மணி அந்த ஓவியங்களை பார்த்து கண்ணீர்வடித்து, அற்புதமாக வரைந்துள்ளீர்கள் எனக் கூறி தோசி மாருகியை கட்டித்தழுவிக்கொள்கிறார். பின் மேடையில் ஏறி ” அணுகுண்டு வீச்சின்போது தனது குடும்பத்தில் உள்ளவர்கள் எப்படி தங்களது உயிரைக்குடுத்து தனது உயிரை எப்படி காப்பாற்றினர் என்பதையும், அச்சூழலில் தான் நேசித்த உயிரினங்களும், நகரமும் எப்படி அழிந்துகொண்டிருந்தது என்பதை விளக்கமாக விவரித்துள்ளாள். இந்நிகழ்வை மையமாக கொண்டுதான் பின்னாளில் தோசி மாருகி இந்த புத்தகத்தை எழுதியுள்ளார்.

குழந்தைகளுக்கு அணுகுண்டுவின் பேராபத்தை விளக்குமாறு எழுதப்பட்டிருப்பதுதான் இப்புத்தகத்தின் தனிச்சிறப்பு.

1 2மாயி-சான் என்ற குழ்ந்தையின் வாழ்க்கையையும், அழகாக சொல்லியிருக்கிறார் ஆசிரியர். மாயி-சான் கதிரியக்கத்தின் பாதிப்பால் வளர்ச்சியற்று காணப்படுகிறாள். அவளது தந்தை அணுகுண்டுவீச்சில் இறந்துவிடுகிறார். தாய் பெரும்போராட்டத்திற்குப்பிறகு மாயி-சானை காப்பாற்றிவிடுகிறாள்.

புத்தகத்தில் ”மாயி-சான் க்கு பசியெடுத்து அழும்பொழுது கிழவியொருத்தி தன் பையிலிருந்து இனிப்பு பொறியுருண்டை ஒன்றை எடுத்துக்கொடுத்துவிட்டு இறந்துவிடுவதும்”.

மாயி-சான் விரல்களில் ஒட்டியிருந்த சாப்ஸ்டிக்ஸை பிரித்து எடுக்கும்போது தாய் கொள்ளும் கலக்கமும் நம் மனதை உலுக்கிவிடுகிறது.

மனித உயிர்களை அழிக்கும் எந்த ஒரு பொருளும் நமக்கு தேவையற்றது. இந்த புத்தகம் இரண்டாம் உலகப்போரின் கோரமான முகத்தை நமக்கு காட்டுகிறது, வரலாற்றின் இருண்ட பக்கங்களை நமக்கு நினைவுபடுத்திக்கொண்டே உள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையும் அளவுக்கு அதிகமான நச்சுக்கழிவுகளை வெளியேற்றுவதால் அங்குள்ள காற்று மாசுபட்டு மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அறிவியல் மனித சமூகத்தின் வளர்ச்சிக்காகத்தான் பயன்படவேண்டும். அழிவுக்காக அன்று என இப்புத்தகம் நமக்கு உணர்த்துகிறது.

இணையத்தில் புத்தகம் வாங்க இங்கே அழுத்தவும்

 

4 Responses so far.

 1. Sundar says:

  Enna oru vetri payanam

 2. Rakkappan says:

  Very nice ..

 3. Ammu meri says:

  அருமை சார்!! அமைதியை நேசிக்கும் அனைவருக்கும் அமைதி கிடைக்க வாய்ப்பில்லை தான்.ஆனால் மாயி -சான் fire of heroshima படித்தன் மூலம் , என்றோ நடந்ததது என்ற உதாசினம் இன்று நிகழ்ந்த ஸ்டெர்லைட்டோடு ஒப்பிட்டு கூறும் போது தான்.அதன் தாக்கம் புரிகிறது.

  அறிவியல் ஒரு பக்கம் முன்னேற்றம் தந்தாலும் மறு பக்கம் ஆயுதமாக மாறிக்கொண்டே தான் இருக்கிறது.

  உங்கள் விமர்சனம் அருமை!!!

  இந்த புத்தக பதிவில் குறைந்தது ஒரு புத்தகம் படித்தால் போதும் என்ற என் வரையறை .உங்கள் விமர்சனம் மூலம் ஹிரோஷிமாவின் வானம்பாடி படித்ததிற்க்கு ஒப்பாகிறது.நன்றி தொடருங்கள்.……

 4. உஷா says:

  குழந்தைகளுக்கு அணுகுண்டின் பேராபத்தை விளக்குமாறு எழுதப்பட்டிருப்பது…இந்த வரி முக்கியமானது…
  எதுவும் குழந்தைகளிடமிருந்து துவங்குவது அவசியமானது அல்லவா…சிறுவர் இலக்கியம் அற்புதமாய் செழிக்கிறது…
  கொமகோவின்
  மொழிபெயர்ப்புமாயி-சான் புத்தகத்திற்கு அழ கான விமர்சனம்..
  ஸ்டெர்லைட் ஆலை நிகழ்வை இணைத்திருப்பதும் அழுத்தம்…


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube