ஞாயிற்றுக் கிழமை..

 

 
ovkqf_179077
ஞாயிற்றுக் கிழமையின்மேல்
அலாதியான ப்ரியம்
உண்டு…

அன்றுதான்
பரபரப்பு குறைந்த
அப்பாவைக்
காணமுடியும்..

அப்பாவின்
முரடான கரங்கள்
அன்று
மென்மையாகி
கேசத்தை
கோதிவிடும்…

எப்போதும்
அனகோண்டாவாக
தெரிந்த அப்பா அன்று
அருளானந்தராக
மாறிவிடுவார்…

அனுதினமும்
அதிகாலையிலே
அவசரமாக
துயில்களையும்
அம்மா
அன்றுதான்
ஆசுவாசமாக
எழுவார்…

அழகான
அன்பு பொழியும்
முகத்தோடு
அன்று
அவர் செய்யும்
சிற்றுண்டி கூட
சுவை கூடியிருக்கும்…

எரிச்சல்தரும்
தாத்தாவின்
இருமல்கூட
அன்று மட்டும்
மெல்லிசையாக
மாறி கேட்கும்…

தகராறு
செய்யும்
அக்காவும்
வாடா தம்பி
பேன் பார்க்கிறேன்
என மடியில்
அணைத்துக்
கொள்வாள்…

பாசத்தையும்
நேசத்தையும்
அள்ளித்தரும்
ஞாயிற்றுக் கிழமையின்மேல்
அலாதியான
ப்ரியம் உண்டு!.

 

One Response so far.

  1. Saravanan says:

    Nice..lovely moments…


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube