அரசியல் இல்லாத இடம் என எதுவும்  இல்லை.  குடும்பத்திலும் கூட அரசியல் உள்ளது. உதாரணமாக வீட்டில் நான்கு பிள்ளைகள் இருக்கிறார்கள் அதில் ஒரு பெண், மூன்று ஆண் என வைத்துக்கொள்ளலாம். அப்பாவிற்கு பெண் குழந்தை மேல் பாசம், அம்மாவுக்கோ கடைக்குட்டி பையன் மேல் பாசம், அப்பா பெண் குழந்தைக்கு தன் அதிகாரத்தினால் குடும்ப பொது சொத்திலிருந்து விற்று எல்லாம் செய்கிறார். அவருக்கு பெண்குழந்தைதான் கண்ணிற்கு தெரிகிறது. அதே வேளை அம்மாவிற்கு அதிகாரம் இல்லை அவளால் அன்பை மட்டும்தான் கொடுக்க முடிகிறது. அதுவும் கடைக்குட்டி பையன் மேல் அதிக அன்பை பொழிகிறாள். 

இடையில் உள்ள இரு பையன்கள் பொருளும் அன்பும் கிடைக்காமல் (அதிகம் கிடைக்காமல்) தனித்துவிட படுகின்றனர்.

37487980_1659147420868431_409692502254157824_n

இந்த நிலை,  ஒரு குடும்பத்திலிருந்து பல குடும்பங்களாகி , பெருகி சமுதாயமாக மலர்ந்து நம் முன் நிற்கிறது.

அத்தகைய தனித்துவிடப்பட்ட நபர் எப்படி சமுதாய அரசியலில் வெல்ல இயலும், என்பதை பற்றிய புத்தகம்தான் தோழர் விசாகன் எழுதியுள்ள தேனி நகர் அரசியல் வெல்லும் தனிநபர் பாத்திரம் புத்தகம்.

இந்த புத்தகத்தை எழுத அவர் ஏறத்தால பதினெட்டு மாதங்களுக்கு மேல்  பல புத்தகங்களை படித்தும், தனது அனுபவங்களை வைத்தும் எழுதியுள்ளார்.

கடந்தகால அரசியல் அதாவது  மதத்திலிருந்து துவங்கி அதன் வழியாய் வந்த சாதியை பற்றியும் தேனி நகரில் இதன் நிலை எவ்வாறு உள்ளது என்பதை பற்றியும் அழகாக எடுத்துரைக்கிறார், நிகழ்கால அரசியலையும் அதில் திடீர் திடீரென முளைத்து வரும் தலைவர்களைப்பற்றியும் அவர்களின் நிலை தேனி நகரில் எவ்வாறு உள்ளது என்பது பற்றியும் தெளிவாக கூறியுள்ளார், எதிர்கால அரசியல் எவ்வாறு அமையவேண்டும் என்பதை உள்ளாட்சியில் சுயாட்சி, உழைப்பு என்ற அருமையான பத்திகளை படிக்கும்பொழுது அறிந்துகொள்ள முடிகிறது.

 

ஒரு தனிநபர் மக்கள் பிரதிநிதித்துவ அமைப்பின் வழியாக  அரசியல் அதிகாரத்தை பெரும் வாய்ப்புகள் உள்ளதாக கூறுகிறது.  இந்த புத்தககத்தை படித்து முடித்த பொழுது  ஒரு தனிபர் தனது உழைப்பினால் எந்த வித சாதிய, பண பலமின்றி  அரசியலுக்கு வந்து மக்களுக்கு சேவை செய்ய்லாம் என்பதை உணரமுடிகிறது.

அரசியல் பற்றி அறிந்துகொள்ளவும், அந்த அமைப்பு ஒரு பகுதியில் எப்படி உள்ளது என்பதை வரலாற்று ஆய்வோடு, சிறந்த எடுத்துக்காட்டுகளோடு அற்புதமாக கொடுத்துள்ளார் தோழர் விசாகன் அவர்கள்.

 

புத்தகம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு வெளிவந்துள்ளது. பன்முகமேடைக்கு நன்றி.

அட்டைப்பட ஓவியம் அருமை. நமது திராவிடத்தின் அடையாளமான துண்டு நீண்டு செல்வது கம்பீரமாக உள்ளது.

புத்தகம் வாங்க

flytevisagan@gmail.com

Visagan Theni@Facebook

9487845666

 


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube