சர்கார்ன்னாலே பிரச்சனையின்னு பொருள் வச்சுக்கலாம் போல..
இந்த சர்கார்லயும் ( நம்ம ஊர்லதாங்க) பிரச்சனை. செண்ட்ர்ல சொல்லவே தேவையில்ல (அவங்களுக்கும் நமக்கும் வாய்க்கா தகராறு) பிரச்சனை.. சரி படமாவது நிம்மதியா பாக்கலாம்னு நினைச்சா. அங்கேயும் பிரச்சனை.
அய்யோ தாங்கவே முடியலப்பா..
கதை என் கதையின்னு ஒருத்தர் கம்ப்ளைண்ட் கொடுத்த பின்னாடி. சர்கார் படம் பற்றி பெரிய எதிர்பார்ப்பு சோசியல் மீடியாவுல வந்திருச்சு. வருண் ராஜேந்திரன் முன்னாடியே சங்கத்துல மெயின் கதையப்போல அதாவது இந்த சர்கார் கதையப்போல 90 % எழுதி பதிவு பண்ணிட்டு. நமது வருங்கால முதல்வருக்கெல்லாம் முதல்வரான விஜய் அவர்களுக்காக
கதை பண்ணி வச்சுட்டாரு.. ஆனா முதல்வர பாக்கவே முடியல..
நம்மாளு கதைய நேக்கா சொல்லி உணர்ச்சியை தூண்டி ( நல்ல உணர்வுகள்தாங்க) படத்தை ஜெயிக்கவைக்க தேவையான மசாலாக்களை தடவி வெற்றியடைய வைக்கிற முருகதாஸ் அவர்கள் முதல்வர பார்த்து பேசி படத்த பண்ணி முடிச்சுட்டாரு.
பாக்யராஜ் நாட்டாமையாக அமர்ந்து பஞ்சாயத்தில் பேசி ஏழைப்பங்காளனாகவும் ஞாயவானாகவும் அமர்ந்து தீர்ப்பு சொன்னார். ஆனா முருகதாஸ் அவர்கள் ஒத்துக்காமல் கோர்ட்டுக்கு போயிட்டார். பின் சமாதானம் அடைஞ்சு அவருக்கு , வருண் ராஜேந்திரன் அவர்களுக்கு அங்கீகாரம் வழங்குவதாக முருகதாஸ் தரப்பு ஒத்துக்கொண்டுவிட்டது.
புகார சொன்ன இரு தரப்பினரும் பயணனோடு ஒத்துப்போக நாட்டாமைக்கு மட்டும் மனதளவில் துண்டைபோட்டுவிடுகின்றனர் ரசிகர்களும், நெட்டிசன்களும்.
பாக்யராஜ் சார் கவலப்படாதீங்க..
உங்க ட்ரீட்மெண்ட் எப்போதும் ஜெயிக்கும்..