சமீபத்தில் ராதா மோகன் இயக்கிய காற்றின் மொழி திரைப்படம் பார்த்தேன்.
ஹலோ….. என ஜோதிகா ஒவ்வொரு முறை கூறும் பொழுதும், நம் மனதிற்குள் இருக்கும் மென் உணர்வுகளை தட்டி எழுப்பி விடுகிறார்.
திருமணம் ஆன பின் பெண்கள் செய்யும் பணிகள் யாருக்கும் தெரிவதில்லை..
வீட்டை கவனித்துக்கொள்ளுதல் மிக எளிய பணி அல்ல, பெரும்பாலான இன்றைய சமூக கட்டமைப்பில் வீட்டில் இருக்கும் பெண்களை மிக சாதாரணமாக பார்த்து கடந்துவிடும் பார்வைதான் நிறைந்துள்ளது. அவளுக்கென்றிருக்கும் ஆசைகளை குடும்பம் என்ற ஒன்றிற்காக, அடக்கி தனது அடையாளத்தை தொலைத்து, தனது ஆசைகளை மகனிடமோ, மகளிடமோ கணவனிடமோ காணத்துடிப்பவள்தான் மனைவி.
திரைப்படத்தில் ஜோதிகா மிக எதார்த்தமாக நடித்திருக்கிறார். கணவராக நடித்திருக்கும் விதார்த் அற்புதமாக நடித்திருக்கிறார்.
தன் வீட்டில் உள்ளவர்கள் தன்னை புரிந்து கொள்ளாமல் இருக்கும் சூழலில் பறவையிடம் பேசும் ஜோதிகா, எதார்த்த வாழ்வில்
“என்னால முடியும்” என்ற நன்பிக்கையுடன் கடக்கும் ஜோதிகா..
பாலியல் வன்மம் நிறைந்த மனதோடு பேசும் நபர்களை தன் நிதானமான பதிலாள் மாற்றும் உளவியல் புரிந்த ஜோதிகா..
மகனை கணவர் அடிக்கும் போது, அந்த வலியினை தாங்காது குமுறும் ஜோதிகா..
மகன் காணாமல் போய் வீடு வரும்போது அவனை கட்டி அணைத்து அழும் தாயன்புமிக்க ஜோதிகா
என ஜோதிகா நம் மனதில் பல பரிமாணங்களில் நிறைந்துள்ளார்.
பல நிலைகளுக்கு பின் , மனைவியின் மொழியை ( உணர்வை ) புரிந்துகொள்ளும் விதார்த் ரசிகர்கள் மனதில் நிறைந்து விடுகிறார்.
”துமாரே சுல்லு” என்ற ஹிந்தி படத்தின் காப்பிதான் என்றாலும் நல்ல ப உணர்வுகளை மக்களிடம் கொண்டு சென்றதில் காற்றின் மொழி திரைப்பட குழுவினர் பாராட்டபட வேண்டியவர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய மிக நல்ல திரைப்படம்