திருவிழா..

ஜன்னலின் வழியாய்5thnigh-3
தெரிகின்றது
ஒரு கிராமத்தின்
ஜொலிக்கும் திருவிழா இரவு..

இராட்டினத்தில்
ஆடலாம்..

பலூன் விற்கும்
தாத்தாவிடம்
வண்ண பலூன் வாங்கி
பறக்கவிடலாம்..

நாதஸ்வரக்காரர்களுடனும்
மேளக்காரர்களுடனும்
கூடவே சென்று
குதூகலிக்கலாம்..

“கந்தன் கருணையோ”
“திருவிளையாடலோ”
பட்டாணியை
கொரித்துக்கொண்டே
திரையில்
பார்க்கலாம்..

நட்சத்திரங்களையும்..
நிலாவையும் பற்றி
கதைகள் சொல்லும்
மாமாவின்
அன்பில் மகிழலாம்..

ஜொலிக்கும் இரவில்
அத்தைகளின்
பாச முத்தப் பரிசத்தில்
நனையலாம்…

மனதிலிருந்த
நினைவுகள்
மலர்ந்த தருணத்தில்
மடியில் துயிலும்
மகன் கேட்டான்
அப்பா..
“திருவிழா”ன்னா
என்னா?

One Response so far.

  1. Saravanan says:

    Excellent sir…. The last line… U r completed Most beautiful and painful…


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube