மீசை முறுக்கி
நிமிர்ந்து நடக்கும்
பட்டாளத்துக்காரன் ஆன
பின்னும் கூட
இன்னும் வயதான
பள்ளிக்கூட
கணக்கு வாத்தியாரை
பார்க்கும் பொழுது
உள்ளுக்குள்
நடுங்குகிறான்
பதின் வயது
மாணவன்…