உறவுகளுக்குண்டான பாசம் என்பது சொல்லில் தெரியாதது. பிரிவுகளை சுமந்து கொண்டு வாழும் வாழ்க்கை மிகவும் கடினமனாது.  சமீபத்தில் அபூனா  என்ற திரைப்படம் பார்த்தேன். அமீன் கதவினை திறக்கிறான்.  வெளிச்சம் வீட்டிற்குள் வருகின்றது. தூங்கும் அண்ணன் தாஹீரை செல்லமாக சீண்டுகிறான் ;  தூக்கம் களைந்து எழும் தாஹீர் தம்பியை விரட்டுகிறான். சிற்றுண்டியை கழிக்கும் போது, அப்பா அவர் அறையில் இல்லை ஏன் போய்விட்டார் என அண்ணன் தாஹீரை பார்த்து கேட்கிறான். அம்மா வருகிறாள், அப்பாவைப்பற்றி கேட்கிறான் அவர் ஒரு பொறுப்பற்றவர் என்கிறாள்.  பின் விளையாடச்செல்லும்போது அமீனீன் அப்பாவைப்பற்றி ஒருவன் பேசிவிட அவனோடு சண்டையிடுகிறான். படம் முழுவதும் அப்பாவின் அன்பிற்காக ஏங்கும் சிறுவனாகவே அமீன் உள்ளான்.

Capture

இருவரும் அப்பாவைத்தேடி பயணிக்கிறார்கள். அமீனின் மனமெங்கும் அப்பா நிறைந்துள்ளார்.  இரவு ஒன்றில் மூச்சுவிடக்கூட இயலாமல் அவதியுருகிறான் அமீன்.  தனக்கு உடம்பு சரியில்லை என அண்ணனை எழுப்பிக் கூறுகிறான்.  தாஹீர் அம்மாவிடம் சொல்கிறான், அம்மா அமீனை அழைத்துக்கொண்டு மருத்துவரிடம் காண்பிக்கிறாள். அமீனுக்கு ஆஸ்த்துமா என கூறுகிறார் டாக்டர். நாட்கள் நகர்கின்றன.

ஒரு நாள் அண்ணனும் , தம்பியும்  தியேட்டருக்கு சென்று படம் பார்க்கிறார்கள், அதில் கதாநாயகனாக நடிப்பவர் அப்பாவைப்போல உள்ளார் என அமீன் அண்ணனிடம் கூறுகிறான். மறுநாள்  தியேட்டருக்கு சென்று அந்த பிலிம்ரோலையே தூக்கி வருகிறார்கள்; பின் காவலர்கள் இருவறையும் கண்டுபிடித்து அழைத்துச்செல்கிறார்கள். அம்மா காவல்துறை அதிகாரியிடம் மண்ணிப்புகேட்டு அழைத்துவருகிறாள். இவர்களின் சேட்டைகளை  கட்டுப்படுத்த இயலாத அன்னை இருவரையும் ஒரு  முஸ்லீம் மத பாடசாலையில் சேர்த்துவிடுகிறாள்.

அங்கே  வாய்பேச, காதுகேளாத பெண்ணோடு தாஹீருக்கு அன்பு மலர்கிறது.அங்கேயும் , ஒருவன் அமீனை சீண்டுகிறான். அமீன் அவனை அடிக்கிறான், பள்ளி ஆசிரியர் கண்டிப்பானவர் , அமீனை நன்றாக அடிக்கிறார். இருவருக்கும் அங்கிருக்க பிடிக்கவில்லை. எப்படியாவது இங்கிருந்து ஓடிப்போய்விடவேண்டும் என எண்ணுகிறார்கள்.  இருவரும் அங்கிருந்து ஓடுகிறார்கள். பின் இருவறையும் பிடித்துவிடுகிறார்கள். தாஹீரை சங்கிலியால் கட்டிப்போடுகிறார்கள். அப்போது அங்குவரும் ஊமைப்பெண் அவனுக்கு சாப்பிட பலகாரம் தருகிறாள்.

அன்றைய இரவில் மீண்டும் நாம் இங்கிருந்து ஓடிவிட வேண்டும் என அண்ணனிடம் அமீன் கூறுகிறான். அண்ணன் அமைதியாக அமர்ந்துள்ளான்.  மறுநாள் காலை ஊரிலிருந்து வீட்டின் அருகில் இருக்கும் ஒருவர் , இருவரையும் பார்க்க வருகிறான். அப்பா வந்தாரா என அமீன் கேட்கிறான். அவர் வரவில்லை ஒரு படம் தந்துள்ளார் என ஒரு கடற்கரை ஓவியத்தை தருகிறான். அறையின் சுவரில் ஒட்டிவைத்து அண்ணனும் தம்பியும் ஆசையாக பார்க்கிறார்கள். தம்பியை தூக்கி கக்கத்தில் வைத்துக்கொள்கிறான் அண்ணன்.330px-MahametSalehHarounCannesMay10

நாட்கள் நகர்கின்றன. அமீன் இங்கிருந்து எப்படியாவது ஓடிவிட வேண்டும் என அண்ணனிடம் கூறுகிறான். அண்ணனை அடிக்கிறான். பின் அழுதுகொண்டே சென்றுவிடுகிறான். அண்ணன் தம்பியை சமாதானப்படுத்தி ஆசுவாசப்படுத்துகிறான்.

இரவில் மீண்டும் ஆஸ்த்துமா நோயினால் அவதிப்படுகிறான். அவனது மருந்தை சிறுவன் ஒருவன் தூக்கி எறிந்துவிடுகிறான். அன்றைய இரவில் மிகவும் நோயினால் அல்லல்படுகிறான். அருகில் இருக்கும் அண்ணனை அழைத்து தனக்குப்பிடித்த கதையை வாசிக்க சொல்கிறான்.  அப்பா நம் மீது அன்பாக உள்ளாரா என கேட்கிறான். அம்மாவும் கூட என்கிறான் அண்ணன்.

மண் சுவரின் வாயிலை காண்பிக்கிறார்கள். அமீன் இறந்துவிடுகிறான். இறப்பிற்குப்பின் தம்பி இல்லாமல் , தனிமையில் இருக்க மிகவும் கஷ்ட்டபடுகிறான் தாஹீர். ஒரு நாள் அங்கிருந்து மீண்டும் ஓடுகிறான், அவனது பின்னாலேயே காதுகேளாத, வாய்பேச இயலாத ஊமைப்பெண்ணும் ஓடி வருகிறாள். இருவரும் வீட்டை சென்று அடைந்த பொழுது, அம்மா சுயநினைவிலந்து  மருத்துவமனையில் இருப்பதை அறிந்து அங்கிருந்து அம்மாவை அழைத்து வீடு வருகிறான்.

அம்மாவை வீட்டிற்குவந்து அன்பாக பார்த்துக்கொள்கிறான்.

அப்பா அனுப்பிவைத்த அந்த கடற்கரை படத்தை எடுத்து பாடல் ஒன்றை பாடுகிறான். சுயநினைவை இழந்த அன்னையும் அந்த பாடலை முனுமுனுக்கிறாள். இருவரும் சேர்ந்து பாடலை பாடுகிறார்கள். படம் நிறைவடைகிறது.

பொறுப்பில்லாத அப்பாவினால் குடும்பம் எப்படி சிதைந்துவிடுகிறது என்பதை அழகான திரைக்கதையில் கூறியிருக்கிறார்கள். இந்த படத்தை பார்க்கும்பொழுது அனைவருக்கும் தனது பால்ய நாட்கள்  கண்டிப்பாய் நினைவில் வந்துசெல்லும்.

அண்ணன் , தம்பியின் பாசத்தையும் நமக்கு நினைவில் கொண்டுவந்து விடுகிறார்கள்.

2002 ல் Mahamat-Saleh Haroun இயக்கிய இத்திரைப்படம் பல விருதுகளை வென்றுள்ளது.

 

நன்றி: செழியன்

 

 


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube