அம்மா..
அன்று போல்
இந்த வாழ்க்கை
இனிதாக இல்லை..
வேசமில்லா
பாசங்கள்..
கருவேல
மரத்தில் வழியும்
பிசினை எடுத்து
கிழிந்த புத்தகங்களை
ஒட்டி மகிழ்ந்து
புன்னகைத்த
பால்ய தருணங்கள்..
பொன்வண்டுகளுக்கு
தீப்பெட்டி
வீடெடுத்து
விளையாடிய
பொழுதுகள்..
நீ நடக்கும் போது
உன் இரு கால்களுக்கு
இடையே வந்து
சில்மிசம் செய்யும்
நிக்கியின் சேட்டைகள்..
பொய் கோபத்தோடு
நிக்கியை அதட்டும்
உன் செய்கைகள்..
அம்மா
அன்று போல்
இந்த வாழ்க்கை
இனிதாக இல்லை..
இத்தனைக்கும்
இடையிலும்
நான்காவது மாடி
அப்பார்ட்மெண்ட்டின்
ஜன்னலின் வழியாக
எட்டிப்பார்த்து
வாழ்க்கையை
வாழச்சொல்லி
முகம் வருடிச்செல்கிறது
அழகான
வேப்பம் பூக்கள்..