வண்ண ஜரிகை கட்டிய
ட்யூப் லைட்டுகள்..
கொட்டுக்காரர்களோடு
ஆடிச்செல்லும்
சிறுவர்கள்..
சீரியல்களுக்குள்
மூழ்காமல் பூக்கள்
சூடி, புன்னகை ஏந்திய
முகத்தோடு வலம்வரும்
பெண்கள்..
வயிறு ஒட்டி
வறுமையில்
வாழ்ந்தாலும்
நம்பிக்கை காற்றெடுத்து
பலூன்களை ஊதி
விற்பனை செய்யும்
கடைக்காரர்களுமென
பருவப்பெண்
உடுத்தியிருக்கும்
தாவணி அழகைப்போன்று
கிராமம்
திருவிழாக்காலத்தில்
மிளிரத்தான் செய்கிறது..