டிஜிட்டல் மையமான இக்காலத்தில் கலை இலக்கிய பண்பாட்டு வெளியில் ஒரு இதழை கொண்டு வருவதென்பது மிகவும் சிரமமான செயல்தான். நிலவெளி என்னும் இதழ் புதிதாய் வெளிவந்துள்ளது என்ற நிலைத்தகவலை முகப்புத்தகத்தில் பார்த்ததும் மனதில் சந்தோசம் பிறந்தது. மதுரையில் மல்லிகை புத்தக கடைக்குச்சென்று நிலவெளியை வாங்கினேன். புத்தகம் அழகான ஓவியத்தை அட்டைப்படமாக கொண்டு அற்புதமான வடிவமைப்போடு இதழ் இருந்தது.
தொல்லியல் துறை சார்ந்த விசயங்களை தொல்லியல் அறிஞர் சொ. சாந்தலிங்கம் ஐயா விரிவாக விளக்கியுள்ளார்.
சரவணன் சந்திரன் அவர்களின் ”பொங்கிமுத்துவின் எக்ஸ்.எல். சூப்பர்” என்னும்
பத்தியின் இறுதி வரிகள் ஒரு கவிதை போன்றிருந்தது.
“ மலைகுறித்த கனவுகளோடு
அடிவாரத்தில் திரிகிற
அம்மனிதர்களுக்கு
இன்னொரு உண்மையும்
தெரிந்தேயிருந்தது
எக்ஸ்.எல்.சூப்பர்
வண்டிகளால்
ஒரு போதும் மலையேற முடியாது”
கவிதைகள் அனைத்தும் சிறப்பாக இருந்தது . குறிப்பாக பெருந்தேவி அவர்களின் கவிதைகளில் புகைப்படங்கள் கவிதை மனதிற்கு மிகவும் நெருக்கமானதாக இருந்தது.
துருத்தி நடனம் சிறுகதையில் விசுவின் வாழ்க்கை நிகழ்வுகள் அழகாக படம்பிடித்துக் காட்டியுள்ளார். எந்த ஒரு நெருடலின்றி சிறுகதையை வாசிக்க முடிந்தது. அழகான மொழி நடை.
மற்ற படைப்புகளும் அற்புதமாக இருக்கின்றது.
ஆசிரியர் குழு மற்றும் டிஸ்கவரி புக் பேலஸ் நண்பர் வேடியப்பன் அவர்களையும் நிலவெளி புத்தகம் கொண்டுவந்ததற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
மிக்க அன்புடன்
தேவராஜ் விட்டலன்
குளிர் நிரம்பிய அதிகாலை, பூட்டான்