சுவர் உண்டு
சுவர்கள் நம்மை புறத்திலிருந்து
பாதுகாக்கத்தான்
அச்சுவர்களே
அழிக்கும்சுவர்களாகி
எளிமையானவர்கள்
இப்போது
இல்லாமல் போனார்கள்..
ஆம்
அன்பானவர்களே
எல்லோருக்குள்ளும்
ஒரு
சுவருண்டு…
அந்தச்சுவர்கள்
நொருங்கலாம்
நொருக்கப்படலாம்
எதுவாகினும்
மீண்டும் மீண்டும்
அன்பைக்கொண்டு
கட்டமைப்போம்
அழியாச்சுவர்களை..