வண்ணநிலவன்:அன்பு அலை

இன்று எழுத்தாளர் வண்ணநிலவன் அவர்களின் பிறந்தநாள். வண்ணநிலவன் அவர்கள் தமிழ் இலக்கியத்தில் மிக முக்கியமான ஆளுமை.

அவரது ரெய்னீஸ் ஐயர் தெரு , கடல்புரத்தில் , நாவல்களும் , எஸ்தர் மற்றும் சில சிறுகதைகளும் படித்துள்ளேன். Screenshot_2019-12-15-11-56-03-999_com.amazon.kindle

இன்றைக்கு இரயில்பயணத்தினூடே அவரது சாரதா என்ற சிறுகதையை கிண்டலில் படித்தேன். கிண்டலில் மேலும் அவரது சில நூல்கள் உள்ளது. மறக்கமுடியாத மனிதர்கள் என்ற கட்டுரைத்தொகுப்புகளும் நான்கு பகுதிகளாக உள்ளது.

சாரதா சிறுகதை 70 களில் கண்ணதாசன் சிற்றிதழில் வெளிவந்துள்ளது.

பிரம்மதேசம் என்ற ஊரில் வெங்கய்யர் என்பவர் வாழ்ந்துவருகிறார். அவரது முதல் மனைவியின் மகள்தான் சாரதா. தன் இரண்டாவது மனைவி தன் மகளை கொடுமைக்குள்ளாக்குவதை பொருத்துக்கொள்ள இயலாமல் மனம்வருந்தி. தன் மகளை டவுனிலிருக்கும் அவளது சிநேகதி வீட்டிற்கு சென்றுவிடும்படி அனுப்பி வைக்கிறார்.

கையில் அதிகபணமில்லாததால் இருப்பதை கொடுத்து வழியனுப்புகிறார். அந்தப் பணம்கொண்டு ஊருக்குப்போக மட்டும்தான் இயலும், திரும்பிவர இயலாது. சிநேகிதி சில மாதங்களுக்கு முன்பு எழுதிய கடிதத்தில் உள்ள முகவரியைக்கொண்டு அவளைத் தேடிச்செல்கிறாள்.

FB_IMG_1576381017221அந்த முகவரியில் அவள் இல்லை..

தேடி அலைகிறாள் எந்தப்பலனுமில்லை

வேறுவழியில்லாமல் பஸ் ஸ்டாண்டிலேயே இரவைக்கழிக்கிறாள்.

போலீஸ் பஸ் ஸ்டாண்டில் தூங்கும் அனைவரையும் கைது செய்து கோர்டிற்கு அழைத்துச் செல்கின்றனர். அந்தக் கூட்டத்தில் அழகம்மையென்ற விலைமாதுவும் உள்ளாள்.

நீதிபதி அனைவரையும் எச்சரித்து ஐந்து ரூபாய் அபராததொகை கட்டிவிட்டு செல்லும்படி ஆனையிடுகிறார்.

சாரதா.. தவிர எல்லாப் பெண்களும் அபராதம் செலுத்திவிடுகின்றனர். சாரதாவின் வசம் அவ்வளவு பணமில்லை

அவள் மிரண்டுபோயுள்ளாள். என்ன செய்வதென்று தெரியவில்லை..

போலீஸ் அவளை சீண்டுகிறான். அவள் பையில் வைத்துள்ள பொருட்களை கொட்டுக்கிறான். அவளது உள்ளாடைகள் கீழே விழுகின்றன. பணமில்லை..

அப்பொழுது அழகம்மை ” யே சும்மா இருய்யா

அந்தப்பெண்ணை பார்த்தா தெரியலையா எனக்கூறி அவளுக்குண்டான அபராதத் தொகையை கட்டி , டிக்கெட் எடுத்துக்கொடுத்து பஸ்ஸில் அனுப்பி விடுகிறாள்.

கதை முடிகிறது.

 

சிறுகதையில் ஊர் பற்றிய சித்தரிப்பு , கதை சொல்லும் மொழி மிக அழகாக இருக்கிறது. கதையில் இருக்கும் மனிதம் நம்மை அவர் எழுத்தின்பால் மேலும் நேசிப்பைத் தூண்டுகிறது.

 

வாழ்த்துகள் வண்ணநிலவன் சார்.

 


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube