தினம்தோறும்
அதிகாலை
கண்விழிக்கச்
செய்கிறது
இந்தப்
பறவையின் சப்தம்…
தன்
இனிய
சப்தத்தினால்
அதிகாலையை
ரம்மியமாக்குகிறது
இந்தப் பறவை..
இராஜஸ்தானின்
இவ் வெக்கை மிகு
நாட்களில் ஒரு
வேம்புவின் கிளையில்
அமர்ந்து வலையிட்ட
ஜன்னலுக்குள்
துயில்கொண்டிருக்கும்
என் மேல் இந்த
வெண்ணிறப் பறவைக்கு
ஏன் இந்த கரிசனம்..
இந்த
அழகிய பறவையின்
உருவில் இருப்பது
யார்?
என் மீது
அன்பை பொழிந்த
முன்னோர்களா?
பால்யத்தில் தோழமையோடு
சுற்றித்திரிந்து
மறைந்துபோனப்
பள்ளித்தோழனா?
நேசத்தின் தேவையை
கற்றுக்கொடுத்த
அந்த பதின்பருவ
தேவதையா?
தேசம் கடந்தாலும்
மாநிலம் கடந்தாலும்
நேசிப்பவர்கள்
எப்போதும்
நம் அருகிலேயே இருக்கிறார்கள்
இந்த அழகிய பறவைபோல..
Nice ….