பெரிய ஹால்
ஸ்கார்பியோ கார் நிற்கிற
அளவு போர்டிகோ
வெஸ்ட்டனும் இண்டியனும்
வைத்த டாய்லட் பாத் ரூம்
டயனிங் ஹால்
இரண்டு பெட்ரூம் வித் அட்டாச்
பாத் ரூம் என அனைத்து
வசதிகளும் கொண்ட வர்ணங்கள்
அழகாய் பூசிய வீட்டில்
இல்லை
அம்மாவின் வாசமும்
அன்பின் நேசமும்
பால்யத்தின் நினைவுகளும்.