தினம்தோறும் அதிகாலை கண்விழிக்கச் செய்கிறது இந்தப் பறவையின் சப்தம்… தன் இனிய சப்தத்தினால் அதிகாலையை ரம்மியமாக்குகிறது இந்தப் பறவை.. இராஜஸ்தானின் இவ் வெக்கை மிகு நாட்களில் ஒரு வேம்புவின் கிளையில் அமர்ந்து வலையிட்ட ஜன்னலுக்குள் துயில்கொண்டிருக்கும் என் மேல் இந்த வெண்ணிறப் பறவைக்கு ஏன் இந்த கரிசனம்.. இந்த அழகிய பறவையின் உருவில் இருப்பது யார்? என் மீது அன்பை பொழிந்த முன்னோர்களா? பால்யத்தில் தோழமையோடு சுற்றித்திரிந்து மறைந்துபோனப் பள்ளித்தோழனா? [ Read More ]Continue
எல்லோருக்குள்ளும் எல்லாம் தெரிந்தவனும் எதுவும் தெரியாதவனும் இருக்கின்றான்.. சில நேரத்தில் எல்லாம் தெரிந்தவன் கர்ஜிக்கிறான்.. சில நேரத்தில் எதுவும் தெரியாதவன் மௌனித்திருக்கிறான்.. எல்லாம் தெரிந்தவனின் கர்ஜனையை யாரும் கேட்பதில்லை.. ஏனோ எல்லாம் தெரிந்தவனைவிட எதுவும் தெரியாதவனைத்தானே உலகம் நேசிக்கிறது..Continue
தன்மீதுச் செல்லும் இரயில்சக்கரங்களின் சுமையை புன்னகைத்துக்கொண்டே ஏற்றுக்கொண்டு வெய்யிலிலும் பனியிலும் மழையிலும் இருப்பு கொண்டிருக்கின்றன.. மாநில பேதமின்றி அனைவரையும் தன் இரும்பு தேகத்தால் கட்டி இணைக்கின்றன..Continue
இரயிலோடிச் செல்லும் தண்டவாளத்தின் மீதும் தன் வண்ணச் சிறகைச் சிலுப்பி அமர்ந்து செல்கிறது ஒர் பட்டாம்பூச்சி.. ********* பிரிவென்பது புரிதலின் ஆரம்பம்தானே! ********** இடம்பிடித்து ஜன்னலிருக்கை கிடைத்து நடை மேடையில் ரொட்டிகளை அழகாக கொத்தி தின்னும் மைனாக்களைப் பார்ப்பது ஆனந்தம் பேரானந்தம்! ************ Continue
எல்லோருக்குள்ளும் ஒரு சுவர் உண்டு சுவர்கள் நம்மை புறத்திலிருந்து பாதுகாக்கத்தான் அச்சுவர்களே அழிக்கும்சுவர்களாகி எளிமையானவர்கள் இப்போது இல்லாமல் போனார்கள்..Continue
அம்மா.. அன்று போல் இந்த வாழ்க்கை இனிதாக இல்லை.. வேசமில்லா பாசங்கள்.. கருவேல மரத்தில் வழியும் பிசினை எடுத்து கிழிந்த புத்தகங்களை ஒட்டி மகிழ்ந்து புன்னகைத்த பால்ய தருணங்கள்.. பொன்வண்டுகளுக்கு தீப்பெட்டி வீடெடுத்து விளையாடிய பொழுதுகள்.. நீ நடக்கும் போது உன் இரு கால்களுக்கு இடையே வந்து சில்மிசம் செய்யும் நிக்கியின் சேட்டைகள்.. பொய் கோபத்தோடு நிக்கியை அதட்டும் உன் செய்கைகள்.. அம்மா அன்று போல் இந்த வாழ்க்கை இனிதாக [ Read More ]Continue
வண்ண ஜரிகை கட்டிய ட்யூப் லைட்டுகள்.. கொட்டுக்காரர்களோடு ஆடிச்செல்லும் சிறுவர்கள்.. சீரியல்களுக்குள் மூழ்காமல் பூக்கள் சூடி, புன்னகை ஏந்திய முகத்தோடு வலம்வரும் பெண்கள்.. வயிறு ஒட்டி வறுமையில் வாழ்ந்தாலும் நம்பிக்கை காற்றெடுத்து பலூன்களை ஊதி விற்பனை செய்யும் கடைக்காரர்களுமென பருவப்பெண் உடுத்தியிருக்கும் தாவணி அழகைப்போன்று கிராமம் திருவிழாக்காலத்தில் மிளிரத்தான் செய்கிறது.. Continue
மீசை முறுக்கி நிமிர்ந்து நடக்கும் பட்டாளத்துக்காரன் ஆன பின்னும் கூட இன்னும் வயதானContinue