நீண்டு வளர்ந்திருக்கும் தேவ்தர், யாரிகுல், சினார் மரங்களையும், சினார் மரத்தின் அழகிய இலைகளையும், வளைந்து வளைந்து செல்லும் அழகிய நதிகளையும், மலைகளில் படிந்திருக்கும் பனிகளையும், வானில் சுதந்திரமாக எவ்வித எல்லைக் கட்டுப்பாடுகளின்றி பறந்து கொண்டிருக்கும் பறவைகளையும், பறவைகள் எழுப்பும் இனிய சப்தங்களையும், வண்ண வண்ண மலர்களையும் பார்த்து, மகிழ்ந்து இயற்கையின் அழகை வியந்து ரசித்துக் கொண்டிருந்தான் ஹேமந்த். காஷ்மீரில் இருக்கும் அழகிய பனி படர்ந்திருக்கும் மலைகளை பார்க்கும் போதெல்லாம் ஹேமந்தின் [ Read More ]Continue
நிசப்தம் நிறைந்த இரவில் எப்போதும் போல் கண்சிமிட்டுகின்றன நட்சத்திரஙகள்.. என்றோ தொலைத்த நினைவுகளை நட்சத்திரங்கள் மீட்டுக் கொடுக்கின்றன கனவுகளின் வழியாய்.. தாத்தாக்களையும் பாட்டிகளையும் அம்மாக்களையும் அப்பாக்களையும் மனைவிகளையும் அண்ணன்களையும் அக்காக்களையும் தம்பிகளையும் தங்கைகளையும் இன்னும் எத்தனையோ பிரிந்து சென்ற உறவுகளை நட்சத்திரங்களாகத்தான் தேடிக்கொண்டிருக்கிறது மனது..Continue
செம்பருத்தி பூக்களும், ரோஜா பூக்களும், வேப்ப மரங்களும் , அரச மரங்களும் நிறைந்திருந்த அந்த அழகிய பூங்காவில், ஊஞ்சல்களிலும், சருக்குப் பலகைகளிலும், விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளை காணும் பொழுது சுனிலுக்கு மனதிலொரு சந்தோசமும், அமைதியும் பிறந்தது. எப்போதும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் நகரத்தில் சுனிலுக்கு இருந்த ஒரே ஆறுதல் அந்த சிறிய பூங்கா ஒன்றுதான், பூங்காவில் இருந்து பார்த்தால் கடைசியாக அம்மா வாழ்ந்த வீடு தெரியும், குறிப்பாக அந்த வீட்டின் [ Read More ]Continue
மழை இன்னும் விட்டபாடில்லை, மாடியிலிருக்கும் ஜன்னல்கதவினை திறந்துவிட்டான் குபேரன், மேற்கிலிருந்து வந்த குளிர்க்காற்று அவனது முகத்தை இதமாக வருடிச் சென்றது, அந்த ஸ்பரிசம் அவனுக்கு பிடித்திருந்ததினால் சிறிது நேரம் ஜன்னல் வழியாகத் தெரியும் இருண்ட ஆகாசத்தை பார்த்துக் கொண்டேயிருந்தான். பக்கத்தில் இருக்கும் குளத்திலிருந்து வரும் தவளைகளின் சப்தம் குபேரனின் காதில் தெளிவாகக் கேட்டுக் கொண்டிருந்தது. மழை ஆக்ரோசமாக விடாமல் “ச்சோ” வென பெய்து கொண்டிருந்தது ஊரே இருளில் மூழ்கியிருந்தது, வானில் [ Read More ]Continue
மழை விட்டு விட்டு தூறிக் கொண்டிருந்தது, எங்கு பார்த்தாலும் அழுகைச் சப்தம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.அடி பாதகத்தி தொண்ணூறு வயசுலையும் கல்லு மாதிரி நான் இருக்கையில, அடி நாயே நீ இப்படி பாதியிலேயே போய் சேந்துட்டேயேடி என் ராசாத்தி..நீ அரளிப் பூ வச்சா அல்லிராணியாட்டம், செவ்வந்தி பூ வச்சா செங்கமலமாட்டம்.. மல்லிக பூ வச்சா மந்த மாரியாட்டம்.. என ஓங்காரமாக ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தாள் கருப்பாயி பாட்டி… தெருவெங்கும் செகதியாய் [ Read More ]Continue
நிசப்தம் நிறைந்த இரவில் இரவை வெளிச்சமாக்கும் பறவையைக் கண்டேன்.. பறவையின் இறகிலிருந்து உதிர்ந்தது மஞ்சள் நிறம்.. வடியும் கனவுகளை ஏந்திக் கொண்டு நிசப்தமாய் உறைந்திருந்தது மனம்.. ஒவ்வொரு கனவினையும் பறவை தன் ஒளியால் உயிர்ப்பித்துக் கொடுத்தது.. யாருக்கும் தெரிவதில்லை இருளைத்திண்ணும் பறவைகள் எப்போதும் வெளிச்சத்தை விரும்புவதில்லையென்பதை..Continue
யாரை நேசிப்பதென்று யாரிடம் அன்பு.. செலுத்த வேண்டுமென்று யாரிடம் கருணை காட்ட வேண்டுமென்று.. யாரை புரிந்துகொள்ள வேண்டுமென்று.. யாருடைய கனவுகளை வளர்க்க வேண்டுமென்று.. யாரை போற்ற வேண்டுமென்று.. Continue
கருவேல மரங்கள், வேப்ப மரங்கள், புளிய மரங்கள், குளங்கள், கண்மாய்கள், அந்த கண்மாயின் அருகிலேயே குடியிருக்கும் அய்யனார் சாமிகள் என அனைத்தையும் வேகமாக கடந்து கொண்டிருந்தது பேருந்து. சும்பப் பய எதுக்கு இந்த வெரட்டு வெரட்டுறான்.. கொல்லையா போகுது , நாதாரிப் பய.. – என தண்டட்டான் அணிந்த கிழவியொருத்தி , பேருந்தின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் வேகமாக ஓட்டிச் செல்லும் ஓட்டுனரைப் பார்த்து சப்தம் போட்டுக் கொண்டிருந்தாள். [ Read More ]Continue
ஜனத்திரள் நிறைந்திருந்தது , தன் உடல் முழுவதும் கடிகாரத்தை சுற்றிக்கொண்டு (“குச்பி லேலோ, பச்சாஸ் ரூபியா” “குச்பி லேலோ, பச்சாஸ் ரூபியா”) எதை எடுத்தாலும் ஐம்பது ரூபாயென சப்தம் போட்டுக் கொண்டிருந்தான் ஒரு நடுத்தர வயதுக்காரன். புழுதி படர்ந்த மேனியுடன் பல குழந்தைகள் நடைபாதையில் நின்று கொண்டிருக்கும் பயணிகளிடம் பணம் கேட்டுக் கொண்டிருந்தனர். நிராகரிப்பின் ஊடே கிடைக்கும் சில சில்லரைகளை வேகமாக ஒரு ரோபோ போல் சென்று, படியின் ஓரத்தில் [ Read More ]Continue
வெயில் ஏறிய பின்பொழுதில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நடக்கத் தொடங்கினான் முத்து. அவனது நிழலும் அவனைப்பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்தது. சாலையோரங்களில் பதநீர்க் கடைகளும், தர்பூசணிக் கடைகளும் நிறைந்திருந்தன. வழக்கம் போல் வாகனங்கள் அதீதமான ஒலியை எழுப்பிக் கொண்டே சென்று கொண்டிருந்தன. சில மாதங்களுக்கு முன்பு இதே சாலையில்தானே குழப்பமான மன நிலையோடு அலைந்து திரிந்தோம். இப்போது மனதில் தெளிவு பிறந்திருந்தாலும் அப்போது வலியையும், சந்தோசத்தையும் பகிர்ந்து கொள்ள எனக்கிருந்த [ Read More ]Continue