ரஷ்ய இலக்கியங்கள் எப்போதும் மனித நேசத்தை உயிர்ப்புடன் காட்டுபவையாகவே இருக்கின்றன. அந்த மகத்தான இலக்கியங்களை அளித்தவர்களில் முக்கியமானவர் லியோ டால்ஸ்டாய். லியோ டால்ஸ்டாயின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அறிந்து, புனைவாக கொடுத்துள்ளார் எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள். இராஜஸ்தான் என்றால் அனைவருக்கும் உடனே நினைவு வருவது பாலைவனமும், ஒட்டகங்களும், வெக்கையும்தான் ஆனால் மணல் நிறைந்த பாலை நிலத்தில் குளிரும் மிகுதியாகவே இருக்கும் என்பதை வெகுசிலரே அறிந்திருப்பார்கள். அப்படிப்பட்ட குளிர்மிகுந்த, பனிபடர்ந்த [ Read More ]Continue
தனிமையில் இருக்கும் தன் வாழ்க்கையில், தனது கடந்தகால வாழ்வை நினைத்தபடியே வாழும் செங்காடனின் வாழ்க்கையைப் பற்றி பேசுகிறது, இந்த கல்லும், மண்ணும் நாவல். நிலத்தையும், நிலம்சார்ந்த நினைவுகளையும், தன்னுள்ளையே அசைபோட்டபடி வாழ்க்கையை கடந்துகொண்டிருக்கும் கதாபாத்திரம்தான் செங்காடன். செங்காடன் தான் நாவலின் முதன்மை கதாபாத்திரம். நேரடியான வர்ணனைகளை தவிர்த்து, கதாபாத்திரங்களின் வழியாய் ,புனைவை முதன்மை படுத்தி எழுதியுள்ளார் ஆசிரியர். கோவை நகரின் அருகில் வசிக்கும் விவசாயி செங்காடன், தனக்கென உறவுகள் எதுவுமின்றி [ Read More ]Continue
கிறிஸ்துமஸ் சமயத்தில்.. (ஆண்டன் செக்காவ்) தமிழில் : எம்.ஏ.சுசீலா ஆண்டன் செக்காவ் கதையை மிக எதார்த்தமாக நகர்த்திக்கொண்டு போய் முடிவில் மனதில் கதாபாத்திரங்களின் மேல் அன்பை, ஏக்கத்தை மனதில் உண்டாக்கிவிடுவார். செக்காவின் எளிய எதார்த்தமான நகைச்சுவை உணர்வு மிக்க கதை சொல்லல் முறைக்குத்தான் அனைவரும் செக்காவ்வை இன்றளவும் விரும்பி படிக்கிறார்கள். சமீபத்தில் கனலி தளத்தில் வெளியாகியுள்ள ”கிறிஸ்துமஸ் சமயத்தில்” என்ற சிறுகதையை படித்தேன். எம்.ஏ.சுசீலா அம்மா அவர்கள் தமிழில் மொழிபெயர்ப்பு [ Read More ]Continue
2019 ஆம் ஆண்டின் சாஹித்திய அகாதமி விருதுபெற்ற இந்த நாவலை வாசிக்க வேண்டும் என்கிற என் ஆர்வத்தை எழுத்தாளர் ஜே.ஷாஜஹான் அவர்களிடம் கூறியபொழுது ”என்னிடம் சூல் நாவல் உள்ளது ஐம்பது பக்கங்கள் படித்துவிட்டேன் படிக்க நன்றாக உள்ளது, நீங்க வேணுமுன்னா படிச்சிட்டு குடுங்களேன்” என்றார். எழுத்தாளர் ஜே. ஷாஜஹான் அவர்களிடம் வாங்கிய சூல் நாவலை அன்றைய இரவிலேயே படிக்க ஆரம்பித்தேன். சில பக்கங்களிலேயே நம் வரலாற்றின் அற்புதமான மனிதர்கள் கண்முன்னே [ Read More ]Continue
ஊர்சுற்றிப் புராணம் ஊர்சுற்றுதல் என்பது எல்லோருக்கும் வாய்பதில்லை. இலக்கற்றுப் பயணிக்கும்போது பல பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டும். சில வருடங்களுக்கு முன்பு டெல்லியிலிருந்து ரிஷிகேஷ் சென்று சில தினங்கள் சாமியார்களுடன் சேர்ந்து அலைந்துதிறிந்துள்ளேன். அப்போது ஏற்பட்ட உணர்வினை ராகுல் சாங்கிருத்யாயன் அவர்களின் ஊர்சுற்றிப் புராணம் நூலைப் படித்தபோது உணரமுடிந்தது. இந்தப் புத்தகம் இலக்கிய வாசகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்ற புத்தகம். 16 அத்தியாயங்கள் கொண்ட இப்புத்தகத்தை மிகவும் ஆராய்ந்து, தன் அனுபவங்களையும் [ Read More ]Continue
இலக்கிய வாசிப்பைத் தன் வாழ்வின் மூச்சாகவே கொண்டிருக்கும் தேவராஜ் விட்டலன், படைப்பிலக்கிய தாகத்தோடு பல ஆண்டுகளாக அந்த இலக்கை நோக்கித் தொடர்ந்து கடுமையான உழைப்போடு முயன்று வருபவர். இணைகோடுகளான இந்த இரண்டு செயல்பாடுகளுமே இன்று அவர் எட்டியிருக்கும் வெற்றிக்கு அடித்தளமிட்டிருக்கின்றன.Continue
எழுத்தாளர் அ முத்துலிங்கம் அவர்களின் சிறுகதைகள் எப்பொழுதும் மனதிற்கு நெருக்கமான உணர்வினைத் தரக்கூடியவை. சமீபத்தில் மகாராஜாவின் ரயில் வண்டி என்ற அவரது சிறுகதைத் தொகுப்பை படித்தேன். தொகுப்பில் உள்ள அனைத்து சிறுகதைகளும் படித்தபின் நம் மனதில் சிறு மகிழ்ச்சியையோ, சோகத்தையோ கதைகள் உருவாக்கிவிட்டுச் செல்கின்றன. பத்மாவதி என்ற பெண்ணின் அகமனதின் ஏக்கங்களை “கொம்புளானா” என்ற சிறுகதையில் கூறியிருப்பார். பத்மாவதி தன் குடும்பத்திற்காக ஆத்மார்த்தமாக செய்யும் பணிகளை , கணவன் முதல் [ Read More ]Continue
இன்று எழுத்தாளர் வண்ணநிலவன் அவர்களின் பிறந்தநாள். வண்ணநிலவன் அவர்கள் தமிழ் இலக்கியத்தில் மிக முக்கியமான ஆளுமை. அவரது ரெய்னீஸ் ஐயர் தெரு , கடல்புரத்தில் , நாவல்களும் , எஸ்தர் மற்றும் சில சிறுகதைகளும் படித்துள்ளேன். இன்றைக்கு இரயில்பயணத்தினூடே அவரது சாரதா என்ற சிறுகதையை கிண்டலில் படித்தேன். கிண்டலில் மேலும் அவரது சில நூல்கள் உள்ளது. மறக்கமுடியாத மனிதர்கள் என்ற கட்டுரைத்தொகுப்புகளும் நான்கு பகுதிகளாக உள்ளது. சாரதா சிறுகதை 70 [ Read More ]Continue
சில தினங்களுக்கு முன்பு மதுரையில் இருக்கும் புத்தக கடைகளில் “ நீலகண்ட பறவையைத் தேடி என்ற வங்க நாவலை படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு தேடிக்கொண்டிருந்தேன். இரயில் நிலையத்தில் எதிரில் உள்ள மல்லிகை புத்தக கடை , இலக்கியப் பண்ணை, கோவில் வீதியில் உள்ள நீயூ செஞ்சுரி புக் ஹவுஸ்” என எனக்குத் தெரிந்த புத்தக கடைகளில் தேடினேன். கிடைக்கவில்லை… பின் தங்க ரீகல் தியேட்டர் முன் உள்ள [ Read More ]Continue
வாழ்க்கையை தத்ரூபமாக, விரிவாக எடுத்துரைக்க எழுத்தின் வடிவநிலைகளில் நாவல்வடிவமே மிகவும் ஏற்றது . சில மாதங்களுக்கு முன் எம்.ஏ.சுசீலா அம்மா பல புத்தகங்களை எனக்களித்தார். நல்ல புத்தகங்களைத்தேடித்தேடி வாசிக்க நினைக்கும் என் ஆழ்மனதின் ஏக்கத்தை உணர்ந்தவர் அம்மா. அவர்கள் கொடுத்த புத்தகங்கள் அனைத்தையும் வாசிக்க வேண்டும் என்ற ஆர்வமிருப்பினும், அலுவலக நெருக்கடிகள் காரணமாக வாசிக்கும் மனநிலை வாய்க்கவில்லை. சில தினங்களுக்கு முன்புதான் அம்மா கொடுத்த புத்தகங்களில் சாகித்திய அக்காதெமி விருது [ Read More ]Continue