நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு. ` என்ற குறளின் பொருளுக்கேற்றார்போல் , தான் கற்றுக்கொண்ட நூல்கள் பற்றியும் , தன்னுள் எழும்பிய சமுதாயக்கருத்துக்களையும் “ நவில்தொறும்” என்ற இந்தப் புத்தகமாக நமக்கு கொடுத்துள்ளார் ஆசிரியர் எம்.ஏ. சுசீலா அம்மா அவர்கள். வாசிப்பின் முதல்படியில் இருக்கும் தோழர்களுக்கு இந்தப்புத்தகத்தின் வாயிலாக பல புத்தகங்களைப் பற்றி அறிந்துகொள்ள இயலும். புத்தகத்திலுள்ள பத்தொன்பது கட்டுரைகளில் எவற்றையும் தவிர்க்க இயலாது வாசிக்க [ Read More ]Continue
விடுமுறைக்கு வந்து செல்லும்போது , பிரிவின் வலியை போக்குவதும் : வாழ்வின் மீதான நம்பிக்கைகளை அதிகரிக்கச் செய்வதும் புத்தகங்களே ஆகும். இம்முறை விடுமுறையில் மதுரைப் புத்தகத்திருவிழாவில் தேசாந்திரி பதிப்பகத்தில் தேவமலர் புத்தகத்தை வாங்கினேன். தேவமலர் குறுநாவலின் சிறப்புகளை ஏற்கனே அறிந்துள்ளதால் புத்தகத்தை படிக்க வேண்டும் என்ற ஆர்வம் புத்தகம் வாங்கிய நாள் முதலே தொற்றிக்கொண்டது. சென்னையிலிருந்து கல்கத்தா செல்லும் கோரமண்ட்டல் எக்ஸ்பிரஸில் ஜென்னலின் அருகே அமர்ந்து படிக்கத்துவங்கினேன். படிக்க [ Read More ]Continue
ஒரே வாக்கியத்தில் இந்த நவீனத்தை பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், ‘இது மனித இயல்புகளைப் பற்றிய அரிதான ஆவணம் ‘ என்றே கூற வேண்டும் – கோபிகிருஷ்ணன் நாவலை படித்துவிட்டு அமைதியாய் என் அறை முன்பிருக்கும் பழமையான ஆலமரத்தின் விழுதுகளையே பார்த்துக்கொண்டிருந்தேன்; ஆலமர விழுதுகள் பூமியை அணைத்து ஒன்றாகி உட்சென்று மரத்தை கம்பீரமாக தாங்கி நிற்பது போல்.. மனித மனதை பல நிலைகளிலிருந்து உட்சென்று ஆராய்கிறார் தஸ்தயெவ்ஸ்கி ; என் மனமெங்கும் தஸ்தயெவ்ஸ்கியே நிறைந்திருந்தார். நான் [ Read More ]Continue
எழுத்தாளனுக்கு வாழ்வியலை பதிவு செய்வதில் இருக்கும் முழு சுதந்திரம் நாவல் வடிவத்தில்தான் கிடைக்கிறது. அவன் நாவலின் வழியாய் நமக்கு காலத்தை பதிவு செய்து தருகிறான். சமீபத்தில் கா.நா.சு அவர்கள் எழுதிய ”வாழ்ந்தவர் கெட்டால்” என்ற நாவலைப்படித்தேன். ரகுவின் நண்பனான கதைசொல்லி நீண்ட நாட்களுக்குப் பிறகு தன் நண்பனான ரகுவை சந்திக்க தஞ்சாவூர் வருகிறான். நண்பனோடு தஞ்சையில் உலாவுகிறான், காலையில் , மாலையில் , காவிரிக்கரைகளில், பாலத்தில் என [ Read More ]Continue
ஒரு வருடங்கள் சலனமற்று ஓடிக்கொண்டிருக்கும் இந்த ஹாச்சூ நதியைப்போல ஓடிவிட்டது. சுற்றியும் மலைகள் நிறைந்த ஒரு பள்ளமான மேட்டில் இருக்கும் இந்த இடத்தின் பெயர்தான் ஹா. எங்கள் இராணுவ கேம்பில் இருக்கும் பேரக்கின் ஜன்னல் வழியாய் பார்த்தாலே பெரிய கரும்பாறை கொண்ட மலைகளும், அதன் உள்ளிருந்து பெருகிவரும், ஊற்று நீர்களின் அழகையும் பார்த்து ரசிக்கமுடியும். பூட்டானுக்க வந்த நாள்முதல் பூட்டானின் கலாச்சாரத்தையும், அது சார்ந்த அனுபவங்களையும் மக்களிடம் பேசி அறிந்துகொள்ள [ Read More ]Continue
அரசியல் இல்லாத இடம் என எதுவும் இல்லை. குடும்பத்திலும் கூட அரசியல் உள்ளது. உதாரணமாக வீட்டில் நான்கு பிள்ளைகள் இருக்கிறார்கள் அதில் ஒரு பெண், மூன்று ஆண் என வைத்துக்கொள்ளலாம். அப்பாவிற்கு பெண் குழந்தை மேல் பாசம், அம்மாவுக்கோ கடைக்குட்டி பையன் மேல் பாசம், அப்பா பெண் குழந்தைக்கு தன் அதிகாரத்தினால் குடும்ப பொது சொத்திலிருந்து விற்று எல்லாம் செய்கிறார். அவருக்கு பெண்குழந்தைதான் கண்ணிற்கு தெரிகிறது. அதே வேளை அம்மாவிற்கு [ Read More ]Continue
கதைகள் இல்லாத உலகம் இல்லை என்றே எண்ணுகிறேன். நாம் வாழும் வாழ்க்கை செய்தியாகி பின் கதைகளாக மலர்கிறது. சிறுவயதில் பாட்டி சொன்ன கதைகள் தொடங்கி நண்பர்களிடம் கதை கேட்டு வளர்ந்தவன் நான். எப்போதும் கதைகளைச்சுற்றியே ஓடிக்கொண்டிருக்கிறேன். சமீபத்தில் திரு விசாகன் அவர்கள் எனக்கு சூதாடியும் தெய்வங்களும் என்ற புத்தகத்தை கொடுத்தார். சா. தேவதாஸ் தமிழில் மொழிபெயர்ப்பு செய்துள்ளார். ஏற்கனவே அவரது மொழிபெயர்ப்பு நூல்களை படித்துள்ளேன். புத்தகத்தை கையில் வாங்கியதும் முதலில் அந்த [ Read More ]Continue
உலக மக்கள் அனைவரும் அமைதியைத்தான் நேசிக்கின்றனர். போரை யாரும் விரும்புவதில்லை. சமீபத்தில் தோசி மாருகி எழுதிய மாயி-சான் ஹிரோசிமாவின் வானம்பாடி என்ற புத்தகத்தை படித்தேன். FIRE OF HEROSHIMA என்ற புத்தகத்தின் தமிழ்வடிவம். தமிழில் கொ. மா. கோ. இளங்கோ சிறப்பாக மொழியாக்கம் செய்துள்ளார். தமிழகத்தில் நடைபெற்றுவரும் ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் பெரும் போராட்டத்தினாலும், உயிரிழப்பினாலும் வெற்றியடைந்திருப்பது மனதிற்கு மகிழ்சியை அளித்தாலும். உயிரிழந்தவர்களையும், அவர்களை பிரிந்துவாழும் உறவினர்களை நினைக்கும்பொழுதும் [ Read More ]Continue
பூட்டானிற்கு பணி நிமித்தமாக பயணிக்கும்பொழுது எழுத்தாளர் ஜே. ஷாஜஹான் சார் அந்தோன் சேகவின் புத்தகத்தை கொடுத்தார். இரயில் பயணம், அந்தோன் சேகவின் புத்தகம் எவ்வளவு சந்தோசமான தருணங்கள். ஜன்னலோர இருக்கையில் அமர்ந்துகொண்டு, தேநீர் பருகிக்கொண்டே அந்தோன் சேகவின் கதாபாத்திரங்களோடு பயணித்தேன். பச்சோந்தி என்ற முதல் கதையில் போலிஸ்காரர் அச்சுமலோவின் கதாபாத்திரத்தை மிக அழகாக செதுக்கியிருப்பார் சேகவ். ஒரு நாயினால் கடிபட்ட “ஹீரியக்” சந்தையில் நாயின் காலை பிடித்துக்கொண்டு சப்தமிட்டு கூட்டம் சேர்க்கிறான். [ Read More ]Continue
படிக்கப்படும் எல்லாப் புத்தகங்களும் மனம் விரும்பிய புத்தகங்களாக மாறிவிடுவதில்லை. சில புத்தகங்களே மனதிற்கு நெருக்கமாகிவிடுகிறது. சமீபத்தில் படித்த அண்டோ கால்பட் எழுதிய ஒற்று நாவல் மனதில் நின்றுவிட்ட நாவல். எந்த ஒரு மொழி விளையாட்டுமின்றி, நேரடியாக எளிமையாக சொல்லிச் செல்கிறார். மிக இயல்பாக நாவலில் பயணிக்க முடிகிறது. தாய்மையின் மேல் அன்பில்லாதவர்கள் மிகவும் சிலரே. கொடூர குணம் கொண்டவனும் தன் தாயின் மேல் அன்பு கொண்டுதான் இருப்பான். அண்டோ கால்பட்டும் [ Read More ]Continue