பயணங்கள்…

பயணங்கள் எப்போதும் மனதிற்கு மகிழ்ச்சியையும் தேடுதல்களையும் தந்துகொண்டேதான் உள்ளன, ஒவ்வொரு மனித முகங்களுக்குள்ளும் பல்வேறு கதைகளைப்பார்க்க முடிகிறது. மார்ச் மாதத்தின் மத்தியில் பூட்டானிலிருந்து விடுமுறைக்கு ஊருக்கு வரும்பொழுது உற்சாகமான மனநிலையில்  அலுவலகத்தை விட்டு பயணித்தேன். பூட்டானிலுள்ள ஹா என்ற இடத்திலிருந்து அலுவலக வண்டியில் மேற்குவங்க மாநிலத்தின் பார்டர் பகுதி வரை கொண்டுவந்து விட்டுவிடுவார்கள். பின் அங்கிருந்து நியூ அலிப்புர்துவார் என்ற இரயில் நிலையத்திற்கு வந்து அங்கிருந்து சென்னை செல்லும் இரயிலை பிடித்து பயணிக்க வேண்டும்.p சென்னை செல்லும் வண்டி இரவுதான் காலை எட்டு மணிக்கே இரயில் நிலையம் வந்துவிட்டேன்.  இரயில் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளை நடந்து சுற்றினேன். வங்க மக்கள் எளிமையானவர்களாக தெரிந்தனர். அவர்களின் எளிமையை போன்றே அவர்களது உணவும் மிகவும் எளிமையாகவே இருந்தது. பெரிய பாஸ்ட் புட் கடைகள் அதிகம் இல்லை. கூரைகள் வேய்ந்த உணவு அங்காடிகளே அதிகம் இருந்தன. நம்மை போன்றே வங்க மக்களும் சாவலை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்பவர்கள். இரயிலில் எனது இருக்கை இருந்த பெட்டியில் ஒரு வங்க குடும்பத்தினர் ஏறிக்கொண்டனர். ஒரு பெண் குழந்தை, முப்பத்தைந்து வயதுமிக்க பெண், அவளது கணவன், மேலும் அவர்களது இரு உறவினர்கள். அந்த பெண் உடல்நிலை சரியில்லாதவள் சென்னைக்கு மருத்துவம் பார்க்க செல்கிறார்கள் என என்னால் அறிந்துகொள்ள முடிந்தது. அந்த பெண் இரவு முழுவதும் வலி தாங்காமல் முணுமுணுத்துக்கொண்டே வந்தாள். அந்த முணுமுணுப்பு சப்தம் என்னை என்னவோ செய்தது. இதே முணுமுணுப்பு சப்தத்தை சில வருடங்களுக்கு முன் என் அன்னையின் வாயிலாய் கேட்டுள்ளேன். அதே வலி பொருக்கமுடியா சப்தம் மனதை என்னவோ செய்தது. காலை எழுந்ததும் அந்த பெண்ணின் கனவரின் வழியாய் தெரிந்துகொள்ள முடிந்தது. என் அன்னைக்கு வந்தே அதே புற்றுநோய்தான் இந்த பெண்ணிற்கும். கற்ப பையின் வாயில் புற்று. மனம் பெரும் வலி கொண்டது. என் அன்னை இறக்கும் தருவாயில் சொல்லிக்கொண்டே இருந்தார். எதிரிக்கு கூட இந்த நோய் வரக்கூடாதென்று. அவ்வளவு வலி தரக்கூடிய நோய். அந்த பெண்ணின் முகம் என் அன்னையின் முகம் போல் தெரிந்தது.

***********************************************************************************

விடுமுறைக்கு ஊருக்கு வந்த நாள்முதல் வீடுதேடி அலைதலே வேளையாய் இருந்தது. மிடில்கிளாஷ் குடும்பத்தினர் வீடுதேடி அலைவது பெரும் வலிமிக்கதுதான். ஏழை தன் சூழ்நிலைக்கு ஏற்றவாரு வாழப்பழகிக்கொள்கிறேன். ஒரு பணக்காரன் தன் சூழ்நிலைக்கு ஏற்ற வீட்டை பார்த்துக்கொள்கிறான். ஆனால் இந்த மிடில் கிளாஷ் கீழே இறங்கி வாழவும் முடியாமல், மேலே சென்று வசதியுடன் வாழவும் மனம் இல்லாமல் இந்த இரண்டும் கெட்டான் நிலையில் இருந்து கொண்டு தத்தளிக்கிறார்கள். எனது நிலையும்  மிடில்கிளாஷ் நிலைதான். பல நாள் அலைந்து ஒரு வீடு பார்த்தோம். பெரிய வீடு, அழகான படுக்கையறை, பெரிய ஹால், அழகான கிச்சன், அசுத்தமான டாய்லெட், பரவாயில்லை, கழுவிக்கொள்ளலாம். வாடகையும் மிடில்கிளாஷிற்கு ஏற்றவாறுதான் இருந்தது. மகிழ்ச்சியாய் அட்வான்ஸ் கொடுத்துவிட்டு, சாமான்களை வண்டியில் ஏற்றி இறக்கி போட்டுவிட்டோம்.index ஆசிட் வாங்கி ஊற்றி டாய்லெட்டை தேய் தேய் என தேய்த்து ஒரு வழியாய் மனிதர்கள் பயன்படுத்தும் நிலைக்கு கொண்டுவந்து விட்டோம்.  மறு நாள் வீட்டுக்காரரின் மகள் வீட்டிற்கு வந்து நாங்கள் கொடுத்த பூட்டைதான் வீட்டிற்கு பூட்ட வேண்டும் என ஒரு புது நிபந்தனையை வைத்தார். இது எப்படி அட்வான்ஸ் பணம் வாங்கிவிட்டீர்கள், மாத மாதம் வாடகை வாங்குகிறீர்கள்,  பின் பூட்டும் உங்கள் பூட்டு போட வேண்டும் என ஏன் சொல்கிறீர்கள் என கேட்டதற்கு ? நீங்க போயிட்டீங்கன்னா வீட்டுக்கு பாதுகாப்பு (சிலிண்டரை ஆப் செய்யாமல் சென்றுவிட்டால்) என சொன்னாள். இது எப்படி ஞாயம் என கேட்டேன். வீட்டை காலி செய்து கொள்ளுங்கள் என்றார்.. வீடு காலி செய்யப்பட்டது. அப்போதுதான் வாடகை வீட்டில் வாழ்வதென்பது பெரிய போராட்டம்தான். அப்போது எஸ்.ராமகிருஸ்ணன் எழுதிய அவளது  வீடு என்ற கதை என் நினைவிற்கு வந்தது.

அவளது வீடு

 

****** **********************************************************

5 Responses so far.

 1. Hemanth says:

  super

 2. Lilly says:

  உமது பயணங்களின் அனுபவங்கள் அருமை ஐயா…

 3. Rakkappan says:

  Suprrrrr !!!
  That is true middle class life…

 4. உஷா says:

  உஷா: அன்புச்சகோதரருக்கு…
  என் அன்னைக்கும் அதே நோய்…
  சட்டென கண்கள்
  குளம் கட்டி விட்டன
  வாடகை வீட்டுத்துயரம்….
  இப்படியுமா…

 5. சூப்பர் sir


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube