maxresdefault

“மதுரையில்

மழைத்தூரும் வானம்

மனதில்

பார்க்க நினைத்த

பார்த்திபன்

படம்

வசனம்

பார்த்திபனிடம்

வசப்பட்டத்தருணமது”..

 

திரையில் ஒரே ஆளாக வந்து, நம்மை இரண்டுமணி நேரம் இருக்கையிலேயே கட்டிப்போட்டுவிடுகிறார். திரையில் அவர் மட்டுமே வந்தாலும் , குரல்களாக வரும் கதாப்பாத்திரங்கள் அனைத்தும் நடித்ததுபோன்றே இருந்தது.

மாசிலாமணி கதாபாத்திரமாகவே வாழ்ந்திருந்தார் பார்த்திபன்.

சோடியம் லைட்டின் வெளிச்சத்தில்

கண்ணாடியில் நம்மைப் பார்க்கும்பொழுது

மேலும் அழகாகத் தெரியும் நம்

முகத்தை பார்த்து ரசிக்காதவர்கள்

யாராவது இருக்க முடியுமாயென்ன?..

 

அப்படித்தான் இந்த திரைப்படத்தின் முகமும் பேரழகு..

ஒலி அமைப்பு மிக மிக அற்புதம் .. வசனங்கள் மாசிலாமணியின் நினைவின் வழியாய் உதித்து, மாசிலாமணியின் குரலின் ஊடே , சம்பந்தப்பட்ட மனைவி உஷா, மிச்ச கதாபாத்திரங்களின் குரலும் வருவது அதி அற்புதம் .

இந்த படத்தை பார்த்துக்கொண்டிருக்கும் போது தஸ்தாயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையில் வரும் ரஸ்கோல்னிக்கோவ் கதாப்பாத்திரம்தான் அடிக்கடி நினைவில் வந்தது.

குறிப்பாக மாசிலாமணி ஒரு குற்றத்திற்கு சந்தேகப்பட்டு விசாரித்துக்கொண்டிருக்கும்போது மதுரையில் நடந்த அந்த கொலைக்கும் நான்தான் காரணம் எனக்கூறுகிறான். அந்தக்கொலையை செய்துவிட்டு தூக்கமே இல்லாமல் துன்புரும்பொழுதெல்லாம் மாசிலாமணியின் வழியாய் எனக்கு ரஸ்கோல்னிக்கோவ் நினைவில் வந்து சென்றான்.

 

பார்த்திபன் படத்தில் மிகவும் எல்லோராலும் ரசிக்கப்படுவது அவரது டைமிங் வசனங்கள் இந்த படத்தில் அற்புதமாக வொர்க்கவுட் ஆகியுள்ளது. மதுரையில் அரங்கு நிறைந்த காட்சி மக்கள் அனைவரும் ரசித்து சிரித்தனர். கண்கலங்கினர். பார்த்திபன் அனைவரையும் சிரிக்கவும், கண்ணீர் விடவும் செய்துவிட்டார்.

தினமலர் விமர்சனத்தில் முன்பு பார்த்திபன் பெண்களை உயர்வாய் காட்டும் கதாபாத்திரங்களை உருவாக்கி திரைப்படம் எடுத்தார். இப்பொழுது வரும் அவர் படங்களில் பெண்களை இழிவு செய்கிறார் என்று எழுதியிருந்தார்கள்.

இந்தக்கதை ஒரு கொலையாளியின் வாக்குமூலம், கொலை செய்தவன் தன் காரணத்தை கூறுகிறான் அப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் அவன் கொலைசெய்ததே தான் அதீத அன்பு வைத்திருந்த மனைவி உஷா தன்னை ஏமாற்றி இப்படி செய்துவிட்டாளே என்று வருந்துகிறான் அதே சமயத்தில் மனைவியை மாசிலாமணி கொலை செய்யவில்லை. அவள் வினையே அவளை கொலை செய்துவிட்டது.

இந்த படத்திற்கு ஒத்த செருப்புனு ஏன் டைட்டிலினு யோசிக்கதோணுதில்லையா..

அந்த கேள்வியின் முடிச்சும் கடைசியில் அவிழ்க்கிறார் பார்த்திபன்

 

அந்த முடிச்சை நீங்கள் திரையில் பாருங்கள்..

நம் பார்த்திபனுக்காக..

 


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube